×

குருநானக்கின் 550வது பிறந்தநாள் சீக்கியர்களை வரவேற்க தயாராக உள்ளது கர்தார்பூர்: டிவிட்டரில் இம்ரான் அழைப்பு

இஸ்லாமாபாத்: சீக்கிய மதகுரு குருநானக்கின்550ம் ஆண்டு பிறந்தநாள் விழாவையொட்டி, சீக்கியர்களை வரவேற்க கர்தார்பூர் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் டிவிட்டரில் அழைப்பு விடுத்துள்ளார். சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக்கின் 550ம் ஆண்டு பிறந்தநாள் விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. குருநானக் பிறந்த இடமான பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள குருத்வாரா தர்பார் சாஹிப் சீக்கியர்களின் புனித தலமாக கருதப்படுகிறது. அங்கு ஆண்டுதோறும் சீக்கியர்கள், குருநானக் ஜெயந்தியையொட்டி யாத்திரை செல்வது வழக்கம். இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைக்கோடு பகுதியில் இருந்த 4 கிமீ தொலைவில் இந்த வழிபாட்டு தலம் அமைந்துள்ளது. இந்தியாவிலிருந்து கர்தார்பூர் செல்ல புதிய சாலை அமைக்கப்பட்டு வரும் 9ம் தேதி திறக்கப்பட உள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அலங்கரிக்கப்பட்டுள்ள கர்தார்பூர் வழிபாட்டு தல வளாகத்தின் புகைப்படங்களை தனது டிவிட்டர் பதிவில் நேற்று வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘சீக்கிய யாத்திரீகர்களை வரவேற்க கர்தார்பூர் தயாராகி விட்டது,’ என அழைப்பு விடுத்துள்ளார். மேலும் தனது அரசையே பாராட்டி உள்ள அவர், ‘குருநானக்கின் 550ம் ஆண்டு பிறந்தநாளை கொண்டாடுவதற்காக குறிப்பிட்ட காலத்திற்குள் கர்தார்பூர் பணிகளை நிறைவேற்ற நமது அரசுகளுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்,’ என கூறியுள்ளார்.ஏற்கனவே, குருநானக்கின் 550ம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, இந்தியாவிலிருந்து கர்தார்பூர் வரும் சீக்கியர்களுக்கு கட்டணத்தை ரத்து செய்தும், விசா கட்டாயமில்லை என்றும் இம்ரான் சலுகைகள் அறிவித்தார். இதற்காக, பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் அவரை கடுமையாக விமர்சித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Tags : birthday ,Guru Nanak ,Sikhs ,Imran , Guru Nanak's,550th birthday ready,welcome Sikhs
× RELATED அன்புமணியால்தான் பாஜவுடன் கூட்டணி: ராமதாஸ் விரக்தி