×

கர்தார்பூர் செல்ல அனுமதி கேட்டு சித்து கடிதம்

சண்டிகர்: பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக்  குருத்வாராவையும், பாகிஸ்தானில் நரோவால் மாவட்டத்தில் ராவி நதிக்கரையில்  அமைந்துள்ள தர்பார் சாகிப் குருத்வாராவையும் இணைப்பதற்கான கர்தார்பூர் வழித்தடத்தை அமைக்க, இந்தியா-பாகிஸ்தான் அரசுகள் கடந்தாண்டு நவம்பரில்  ஒப்புக் கொண்டன. அதன்படி, இதற்கான பணிகள் முடிந்து வரும் 9ம் தேதி இந்த வழித்தடம் திறக்கப்பட உள்ளது. கர்தார்பூர் செல்லும் இந்தியர்களுக்கு பாஸ்போர்ட் தேவையில்லை என பாகிஸ்தான் பிரதமர் நேற்று முன்தினம் அறிவித்தார்.

இந்நிலையில், பஞ்சாப் மாநில முன்னாள் அமைச்சரும் அமிர்தசரஸ் கிழக்கு தொகுதி எம்எல்ஏ.வுமான சித்துவுக்கு, கர்தார்பூர் வழித்தட திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் அனுமதி கேட்டு அவர் கடிதம் எழுதி உள்ளார். ஏற்கனவே, இம்ரான்கான் பிரதமராக பதவியேற்ற போது கடந்தாண்டு ஆகஸ்டில் சித்து பாகிஸ்தான் சென்றார்.


Tags : Kardarpur, Permit, Sith, Letter
× RELATED ஆவின் தொழிலாளர்கள் 450 பேர் பணி நீக்கம்:...