×

தமிழகம் முழுவதும் 34 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: உள்துறை செயலாளர் உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் 34 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து, உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி வெளியிட்டுள்ள உத்தரவு:திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி உதவி எஸ்பி ஆசீஸ் ராவத், பதவி உயர்வு பெற்று தமிழ்நாடு சிறப்பு காவல்படையின் 8வது பட்டாலியன் கமாண்டன்ட்டாக நியமிக்கப்பட்டுள்ளார். அந்தப் பதவியில் இருந்த ஜனகன், ராஜபாளையம் 11வது பட்டாலியன் கமாண்டன்ட்டாகவும், அந்தப் பதவியில் இருந்த ஜெயந்தி, ராமநாதபுரம் கடலோர காவல்படை எஸ்பியாகவும், இந்தப் பதவியில் இருந்த செல்வநாகரத்தினம், நாகப்பட்டினம் எஸ்பியாகவும், அந்தப் பதவியில் இருந்த வட சென்னை போக்குவரத்து துணை கமிஷனராகவும், இந்தப் பதவியில் இருந்த சியாமளா தேவி, சென்னை கமாண்டோ படையின் எஸ்பியாகவும், அந்தப் பதவியில் விஜயலட்சுமி, சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு உதவி ஐஜியாகவும்  மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

 கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் உதவி எஸ்பியாக இருந்த கார்த்திக், மதுரை நகர சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராக பதவி உயர்வு பெற்றுள்ளார். அந்தப் பதவியில் இருந்த சசிமோகன், நீலகிரி மாவட்ட எஸ்பியாகவும், அந்தப் பதவியில் இருந்த கலைச்செல்வன், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு எஸ்பியாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்புதூர் உதவி எஸ்பியாக இருந்த ராஜேஸ்கண்ணன், பதவி உயர்வு பெற்று, சென்னை புளியந்தோப்பு துணை கமிஷனராகவும், அந்தப் பதவியில் இருந்த சாய் சரண் தேஜஸ்வி, தேனி மாவட்ட எஸ்பியாகவும், அந்தப் பதவியில் இருந்த பாஸ்கரன், பூந்தமல்லியில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல்படை 13வது அணி கமாண்டன்ட்டாகவும், அந்தப் பதவியில் இருந்த ஜெயவேல், உடுமலைப்பேட்டை 10வது அணி கமாண்டன்ட்டாகவும், அந்தப் பதவியில் இருந்த கயல்விழி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு எஸ்பியாகவும், அந்தப் பதவியில் இருந்த பழனிக்குமார், மதுரை நகர குற்றப்பிரிவு துணை கமிஷனராகவும், அந்தப் பதவியில் இருந்த செந்தில்குமார், திருச்சி ரயில்வே எஸ்பியாகவும், இந்தப் பதவியில் இருந்த சரோஜ்குமார் தாக்கூர், சென்னை சைபர் கிரைம் எஸ்பியாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி சிறப்பு காவல்படை 1வது அணி கமாண்டன்ட்டாக இருந்த உமையாள், சென்னை தமிழ்நாடு சிறப்புக்காவல்படை சிறிய ஆயுதப்படை பிரிவு கமாண்டன்ட்டாகவும், அந்தப் பதவியில் இருந்த ஐயம்பெருமாள், மணிமுத்தாறு 11வது பட்டாலியன் கமாண்டன்ட்டாகவும், அந்தப் பதவியில் இருந்த ஆனந்தன், திருச்சி தமிழ்நாடு சிறப்பு காவல்படை 1வது பட்டாலியன் கமாண்டன்ட்டாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் உதவி எஸ்பியாக இருந்த பத்ரி நாராயணன், பதவி உயர்வு பெற்று திருப்பூர் நகர சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்துப் பிரிவு துணை கமிஷனராகவும், அந்தப் பதவியில் இருந்த உமா, கோவை நகர போக்குவரத்து துணை கமிஷனராகவும், அந்தப் பதவியில் இருந்த பெருமாள், விருதுநகர் எஸ்பியாகவும், அந்தப் பதவியில் இருந்த ராஜராஜன், மதுரை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு எஸ்பியாகவும், திருநெல்வேலி எஸ்பியாக இருந்த அருண் சக்திகுமார், புதுக்கோட்டை எஸ்பியாகவும், அந்தப் பதவியில் இருந்த செல்வராஜ், தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் நிர்வாகப் பிரிவு எஸ்பியாகவும், அந்தப் பதவியில் இருந்த சாந்தி, சிவில் சப்ளை சிஐடி எஸ்பியாகவும், அந்தப் பதவியில் இருந்த வருண்குமார், ராமநாதபுரம் மாவட்ட எஸ்பியாகவும், அந்தப் பதவியில் இருந்த ஓம்பிரகாஷ் மீனா, திருநெல்வேலி எஸ்பியாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

காத்திருப்போர் பட்டியலில் இருந்த உதவி எஸ்பி சுந்தரவதனம், மகாபலிபுரம் உதவி எஸ்பியாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த உதவி எஸ்பி கார்த்திகேயன், ஸ்ரீபெரும்புதூர் உதவி எஸ்பியாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த பிரதீப், சேரன்மாதேவி உதவி எஸ்பியாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த விஸ்வேஷ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி, குளச்சல் உதவி எஸ்பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

காத்திருப்போர் பட்டியலில் இருந்த உதவி எஸ்பி சுந்தரவதனம், மகாபலிபுரம் உதவி எஸ்பியாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த உதவி எஸ்பி கார்த்திகேயன், ஸ்ரீபெரும்புதூர் உதவி எஸ்பியாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த பிரதீப், சேரன்மாதேவி உதவி எஸ்பியாகவும், காத்திருப்போர்
பட்டியலில் இருந்த விஸ்வேஷ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி, குளச்சல் உதவி எஸ்பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Home Secretary ,Tamil Nadu ,IPS officers , 34 IPS officers,shifted , Tamil Nadu,Home Secretary
× RELATED தமிழ்நாடு தலைமை செயலக சங்க கோரிக்கை...