×

10 மாதங்கள் நிறைவடைந்தும் முழுமையாக அமல்படுத்தப்படாத பிளாஸ்டிக் தடை

* சிறிய கடைகளில் தாராளம்  
* பொதுமக்கள் குற்றச்சாட்டு
* தீவிர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை  2019 ஜனவரி 1ம் ேததி முதல் தமிழகத்தில் பயன்படுத்த தடை விதிக்கப்படும்  என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2018ம் ஆண்டு ஜூன் மாதம்  சட்டப்பேரவையில் அறிவித்தார். இதன்படி ஒரு முறை பயன்படுத்திதூக்கி  எறியக்கூடிய பிளாஸ்டிக் தாள்கள், தட்டுகள் போன்றவற்றை தடை செய்து கடந்த  2018ம் ஆண்டு  ஜூன் மாதம் 25ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி 14  வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. குறிப்பாக  உணவகங்களில், உணவுப் பொருட்களை கட்டுவதற்கு பயன்படுத்தும் பிளாஸ்டிக் தாள்,  பிளாஸ்டிக்கால் ஆன தெர்மாகோல் தட்டுகள், குவளைகள், உள்பக்கம் பிளாஸ்டிக்  பூசப்பட்ட காகித குவளைகள், தண்ணீர் குடிக்க பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்  குவளைகள், தண்ணீர் பாக்கெட்டுக்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள்,   உணவை பார்சல் செய்ய பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொட்டலங்கள், கடைகளில்  பொருட்கள் வாங்கும்போது இலவச இணைப்பாக தரப்படும் பிளாஸ்டிக் பைகள்  ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.

இதேபோன்று பிளாஸ்டிக் கொடி,  இளநீர், குளிர்பானங்களை உறிஞ்சிக் குடிக்க பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்  உறிஞ்சுக் குழல்கள் ஆகியவற்றுக்கும் தமிழக அரசு தடை விதித்தது.  இந்த  தடைக்கு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் ெதாடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து  வந்தனர். அரசின் இந்த செயல் சிறிய வியாபாரிகளை அழிப்பதாக உள்ளது என்றும்  வணிகர்கள் குற்றம்சாட்டினர். இந்நிலையில் பிளாஸ்டிக் தடை உத்தரவை  எதிர்த்து பல்வேறு வழக்குகளும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்  செய்யப்பட்டது. இவற்றை விசாரித்த உயர் நீதிமன்றம் அனைத்து மனுக்களையும்  தள்ளுபடி செய்து விட்டது. இதை தொடர்ந்து, பிளாஸ்டிக் தடை உத்தரவு தமிழகம்  முழுவதும் தீவிரமாக அமல்படுத்தப்பட்டது. பிளாஸ்டிக் தடை தொடர்பான உத்தரவை  கண்காணிக்க தலைமை செயலாளர் தலைமையில் 10 துறை அதிகாரிகள் அடங்கிய குழு  அமைக்கப்பட்டது. மேலும் சென்னை, திருச்சி, மதுரை என்று மூன்று  மண்டலங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டனர். இதனைத்  தொடர்ந்து மாவட்ட மற்றும் வட்டம் வாரியாக குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. அப்போதும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க  முடியாத காரணத்தால் தடையை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்துபவர்களுக்கு அபராதம்  விதிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த  சட்ட திருத்த மசோதா கடந்த பிப்ரவரி  மாதம் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இதன்படி தடை  செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு முதல் முறை  ₹20 ஆயிரமும், 2வது முறை ₹50 ஆயிரமும், 3வது முறை ₹1 லட்சமும்  அபராதம் விதிக்கப்படும்.  வணிக வளாகங்களில் விற்பனை செய்தால் முதல் முறை  ₹10 ஆயிரமும், 2வது முறை ₹15 ஆயிரமும், 3வது முறை ₹25 ஆயிரமும்  அபராதம் விதிக்கப்படும். மளிகை கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்   பொருட்களை பயன்படுத்தினால் முதல் முறை ₹1000மும், 2வது முறை ₹2  ஆயிரமும், 3வது ₹5 ஆயிரமும் விதிக்கப்படும். சிறு வியாபாரிகளுக்கு முதல்  முறை ₹100ம், 2வது முறை ₹200ம், 3வது முறை ₹500ம்  விதிக்கப்படும்.  இதையும் மீறி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் வணிக  உரிமை ரத்து செய்யப்படும்.இந்நிலையில் பிளாஸ்டிக் தடை அமல்படுத்தபட்டு 10 மாதங்கள் முடிவடைந்தும் தடை உத்தரவை முழுமையாக அமல்படுத்த முடியவில்லை என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து,  பிளாஸ்டிக் பயன்படுத்துவோர் மீது அபராதம் விதிக்காத காரணத்தால் பிளாஸ்டிக்  பயன்பாடு மீண்டும் தலை தூக்கியுள்ளது என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.  குறிப்பாக சிறு கடைகள் மற்றும் சிறு உணவகங்களில் மீண்டும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தப்பட்டுவருகிறது. குறிப்பாக உணவகங்கள், சிறிய மளிகைக்கடைகள், சாலையோர கடைகள், துரித உணவங்கள் ஆகியவற்றில் பிளாஸ்டிக் பயன்பாடுத் தாராளமாக உள்ளது. சிறு வியாபாரிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் ₹ 100 முதல் ₹ 500 வரை மட்டுமே அபராதம் விதிக்கப்படுகிறது. எனவே வியாபாரிகள் எந்த தயக்கமும் இன்றி பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திவருகின்றனர். இந்தக் கடைகளில் மறுசுழற்சி செய்யக் கூடிய பிளாஸ்டிக் எனக் கூறிய தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திவருகின்றனர். குறிப்பாக மறுசுழற்சி செய்யக் கூடிய பிளாஸ்டிக்  என்பதற்கான மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதி எண்ணை கவர்களில் அச்சடிப்பது இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். எனவே பிளாஸ்டிக் தடைய முழுமையாக அமல்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பிளாஸ்டிக்  பொருட்களை பயன்படுத்துபவர்களுக்கு முறையாக அபராதம்  விதிக்கவும், பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தடுக்கவும் அதிகாரிகள் உரிய   நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பராமரிப்பு இல்லாத இணையதளம் பிளாஸ்டிக் தடை தொடர்பான தகவல்களை www.plastic pollutionfreetn.org என்ற இணையதளம் உருவாக்கப்பட்டது. இந்த இணையதளத்தில் பறிமுதல் தொடர்பாக தகவல்கள் மாவட்ட வாரியாக பதிவேற்றம் செய்யப்பட்டுவந்தன. இந்நிலையில் கடந்த சில மாதங்களில் அந்த தகவல்கள் பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளன.

Tags : Plastic ban, after ,10 months
× RELATED தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 13...