×

ரூ.12.21 கோடியில் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்த அருங்காட்சியகம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை: கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்த சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கொந்தகையில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். ரூ.12.21 கோடியில் உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

கீழடியில் ரூ. 12.21 கோடி செலவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சென்னை கலைவானர் அரங்கில் தமிழ்நாடு நாள் விழா கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது சிவகங்கை மாவட்டம் கொந்தகை கிராமத்தில் கீழடி பொருட்களை கொண்டு ரூ. 12.21 கோடி செலவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் எனத் தெரிவித்தார்.

அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தை செயல்படுத்த ரூ.76.23 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 15,524 கிராம ஊராட்சிகள், 528 பேரூராட்சிகளில் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. விளையாட்டு உபகரணங்கள், போட்டிகளை நடத்துதல், விளம்பரங்கள் செய்வதற்காக ரூ.38.85 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திட்டத்தின் கீழ் கபடி, வாலிபால், கிரிக்கெட் அல்லது கால்பந்து விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும்.

Tags : Museums , keeladi, Museums
× RELATED ‘பல்லாங்குழி துவங்கி கோலிக்குண்டு...