×

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.17.34 கோடியில் புது பொலிவாகிறது சத்திரம் பஸ் ஸ்டாண்ட்

திருச்சி: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் புது பொலிவு பெறுகிறது. இதற்கான பணிகள்  இன்று துவங்கியது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திருச்சி மாநகராட்சியில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.  அதன்படி திருச்சி சத்திரம் பஸ்நிலையம் பொலிவு பெறுகிறது. சத்திரம் பஸ் நிலையத்தில் தினமும் 285 பஸ்கள் 4 நடையாக, மொத்தம் 1,140 நடையாக  வந்து செல்கிறது. இந்நிலையில்  ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சத்திரம் பஸ் நிறுத்தம் மறு வளர்ச்சிப் பணிக்கு ரூ.17.34 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. முறையான அறிவிப்புகள் மூலம் டெண்டர் விடப்பட்டது. புது பஸ்ஸ்டாண்ட் அமைக்கும் பணிகள் துவங்கப்பட உள்ளது. இங்கு பேஸ்மெண்ட் தளத்தில் 350 எண்ணிக்கையில் இரு சக்கர வாகன நிறுத்துமிடம், தரைத்தளம் 30 பேருந்துகள் நிற்கும் வசதிகள், 11 கடைகள், பாலூட்டும். அறை, பொருட்கள் பாதுகாக்கும் அறை, ஓய்வறை மற்றும் கழிப்பிடம் இடம் பெறுகிறது. முதல்தளத்தில் 17 கடைகள், 5 கடைகள்(உணவகமாக), காவல் உதவி மையம் மற்றும் கழிப்பிடம் வசதிகள் இடம் பெறுகிறது.

இதற்கான முதல் கட்ட பணிகள் இன்று துவங்கியது.  இதற்காக அப்பகுதியில் நாளை ஆக்ரமிப்புகள் அகற்றப்பட உள்ளது. இதுபற்றி ஆட்டோ மூலம் மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஒலிப்பெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது. தற்போது  நகர பஸ்கள் நின்று செல்ல கல்லூரி சாலை, கரூர் ரோடு, அண்ணா சிலை, சிந்தாமணி பஜார், பெரியசாமி டவர் முதல் மெயின்கார்டு கேட் வரையில் தற்காலிக பஸ் ஸ்டாப் அமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் வசதிக்களுக்காக 6 இடங்களில் 70 தற்காலிக நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளது.

Tags : Shatram Bus Stand , Smart City
× RELATED சென்னை இளம் பெண்கொலை வழக்கு கைதான காதலன் பரபரப்பு வாக்குமூலம்