உடல் எடைக்குறைப்பு நிறுவனமான KOLORS-ல் வருமான வரித்துறை அதிரடி சோதனை: முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்படும் என எதிர்பார்ப்பு

சென்னை: உடல் எடைக்குறைப்பு நிறுவனமான கலர்ஸில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 3 மாநிலங்களில் கலர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான சுமார் 50 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். உடல் எடை குறைக்கும் அழகு நிலையம் மற்றும் சிகிச்சை மையமாக செயல்பட்டு வரக்கூடிய கலர்ஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஹைதராபாத்தில் இருந்து வந்துள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் கிட்டத்தட்ட 3 மாநிலங்களில் சோதனை நடத்தி கொண்டிருக்கிறார்கள். சென்னையில் 6 இடத்திலும் அதே போல கோவை, புதுச்சேரி, வேலூர், திருச்சி ஆகிய இடங்களில் இந்த சோதனை நடந்து கொண்டிருக்கிறது.

3 மாநிலங்களை தலைமை இடமாக கொண்டு இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகங்கள், கார்ப்பரேட் அலுவலகங்கள், உரிமையாளர்களுடைய வீடு, நிர்வாகிகளுடைய வீடு என தனித்தனியாக கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து வரி ஏய்பு புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனையானது இன்று காலை 8 மணியிலிருந்து தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து எந்தவித தகவல்களையும் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. ஆனாலும் தொடர்ந்து சோதனையானது நடைபெற்று வருகிறது. கல்கி பகவானின் இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின் தொடர்ச்சியாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் இதுவரை உறுதிப்படுத்தவில்லை. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : Body Weight Loss ,Body Weight Loss Firm , Body Weight Loss Agency, KOLORS, Income Tax Department, Trial
× RELATED kolors உடல் எடை குறைப்பு குழும...