×

மாநகராட்சி கூட்டத்தில் கருப்பு துணியுடன் காங்கிரஸ் உறுப்பினர்கள் போராட்டம்

பெங்களூரு: ரோடுகளில் காணப்படும் குழிகளை மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் கைகளில் கருப்பு துணி அணிந்து போராட்டம் நடத்தினர்.பெங்களூரு மாநகராட்சி கூட்டம் மேயர் கவுதம் குமார் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டம் தொடங்கிய உடனே எதிர்க்கட்சியான காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் தர்ணாவில் ஈடுபட்டனர்.  

முன்னாள் மேயர்கள் மஞ்சுநாத் ரெட்டி, பத்மாவதி, சம்பத்ராஜ், கவுன்சிலர்கள் சத்யநாராயண், பார்த்திபராஜன்,.  ராமச்சந்திரப்பா உள்ளிட்டோர் ரோடுகள் குண்டும் குழியுமாக காணப்படுகின்றன. காண்டிராக்ட் எடுத்த நிறுவனத்தின் சார்பில் அதை சரி செய்யவேண்டும் என்று டெண்டர் விதியில் ஷரத்து இருக்கிறது. எனவே, மாநகராட்சி சார்பில் இதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேயர் கவுதம் குமார் அமைதியாக இருக்கும்படி கூறினாலும் காங்கிரஸ் உறுப்பினர்கள் கேட்காமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து மேயர் கவுதம் குமார், “ரோடுகளில் காணப்படும் பள்ளங்கள் விரைவாக சரி செய்யப்படும். மோட்டார் சைக்கிளில் சென்று நானே இதை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்’’  என்றார்.

Tags : Congressmen ,corporation meeting ,Congress ,Municipal Meeting Members , Municipal, Meeting, Members, Congress , black cloth
× RELATED முன்மொழிந்தவர்களின் கையெழுத்தில்...