×

பாரிமுனையில் வாகன சோதனையின்போது 8 லட்சம் வெளிநாட்டு சிகரெட் 64 கிராம் தங்க கட்டி சிக்கியது: குருவி பிடிபட்டார்

தண்டையார்பேட்டை: பாரிமுனையில் போலீசார் நடத்திய வாகன சோதனையின்போது, 8 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட், 64 கிராம் தங்க கட்டியை கடத்தி வந்தவர் பிடிபட்டார். சென்னை  பாரிமுனையில் கடந்த 2 நாட்களுக்கு முன்,  இரவு நேரத்தில் வடக்கு கடற்கரை காவல்நிலைய  இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில்  ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே பைக்கில் வந்த ஒருவரை, போலீசார் மடக்கி  பிடித்தனர். அவரது பைக்கை  சோதனை செய்தபோது, அதில் ₹8 லட்சம்  மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகளும், 64 கிராம் தங்க கட்டியும் இருப்பது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர்  அவரை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். அதில்,  ராயபுரத்தை சேர்ந்த முருகேசன் (40) என்பதும், இவர் சிங்கப்பூர், மலேசியா  மற்றும் அரபு நாடுகளுக்கு குருவி போல் சென்று, அங்கிருந்து சிகரெட்,  மதுபாட்டில்  உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு பொருட்களை கடத்தி வந்து, பர்மா பஜார் பகுதியில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து  வடக்கு கடற்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, முருகேசனை கைது செய்தனர்.

Tags : vehicle test ,vehicle raid , Barium, foreign cigarettes, gold hug
× RELATED டூவீலர் பின்னிருக்கை நபருக்கும்...