×

இரைதேடி கிராமத்திற்கு படையெடுக்கும் மலைப்பாம்புகள்

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே காளாப்பூரில் மலைப்பாம்பு பிடிபட்டது. சிங்கம்புணரி மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களில் மழை பெய்வதால் மலைப் பாம்புகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வரத்தொடங்கியுள்ளது. மேலும் வீடுகளில் வளர்க்கப்படும் கோழிகளை மலைப்பாம்பு இரையாக்கி வருகிறது.
இந்நிலையில் காளாப்பூர் ஆத்தங்கரைப்பட்டி தரைப்பாலம் அருகே குடியிருப்பு பகுதியில் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பை அப்பகுதி மக்கள் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், மழைக்காலத்தில் இரைதேடி கிராமங்களுக்குள் மலைபாம்புகள் புகுந்து கோழிகளை உணவாக்குகிறது. கடந்த ஒரு மாதத்தில் மருதிப்பட்டி, காளாப்பூர், கோயில்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் மலைபாம்புகள் பிடிப்பட்டுள்ளது’’ என்றனர்.

Tags : Invasion ,village ,Iridedi Iridedi , Prey, pythons
× RELATED கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை...