×

தமிழகத்தில் கோவை, நாகை, தூத்துக்குடி மாவட்டங்களில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் திடீர் சோதனை

கோவை: கோவை மற்றும் நாகூரில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். கோவையில் கடந்த ஆண்டு இந்து இயக்கத் தலைவர்கள் சிலரைக் கொலை செய்ய திட்டம் தீட்டியதாக முஸ்லிம் இளைஞர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் சமூக வலைதளங்கள் மூலம் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களுடன் கருத்துகளையும், தகவல்களையும் பரிமாறியது தெரியவந்தது. இதில் சில இளைஞர்கள் இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களுடன் தொடர்பில் இருப்பதும் விசாரணையில் வெளிவந்தது.

இதையடுத்து இருவரும் நேற்று முதல் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் கோவையில் உக்கடம் உள்ளிட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இச்சோதனையில் மொபைல் போன்கள், கணிணிகள் உள்ளிட்டவற்றை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர் அதிகாரிகள். இவற்றை ஆய்வு செய்வதற்காக கணிணி வல்லுநர்கள் இருவரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அழைத்து வந்தனர். ஏற்கனவே கோவை உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் பலமுறை என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

நாகை மாவட்டம் நாகூரிலும் சோதனை

கோவையை தொடர்ந்து நாகூரிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  மியாந்த் தெருவில் முகமது அஜ்மல் என்பவர் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. சர்வதேச தீவிரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் முகமது அசாருதீன், சேக் ஹிதயதுல்லா இவருக்கும் வேறு யாருடன் தொடர்பு இருந்தது என்பது குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி காயல்பட்டினம் அருகே சோதனை

கோவை மற்றும் நாகூரை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் கிராமத்திலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் கிராமத்தில் அப்துல்லா என்பவரின் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : raid ,Coimbatore ,Nagai ,Tamil Nadu National Intelligence Officers ,districts ,Thoothukudi ,Tamil Nadu , Coimbatore, Nagai, Thoothukudi, National Intelligence Officers
× RELATED மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்