×

ஆயுட்காலத்தைக் குறைக்கிறதா மூளை?

நன்றி குங்குமம் முத்தாரம்

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் நூறு வருடங்கள் உயிர்வாழ வேண்டும் என்ற ஆசையிருக்கும். அதனால் தான் வேறு எதையும் விட தங்களின் உடல் நிலையில் அதிக கவனத்தைச் செலுத்துபவனாக மனிதன் இருக்கிறான். எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை என்று நோய்களுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்கிறான். ஒரு மனிதன் நீண்ட காலம் வாழ்வதற்கும், சீக்கிரத்திலேயே மரணமடைவதற்கும் பல காரணிகள்  இருக்கின்றன. சிலருக்கு ஜீன்களும், கட்டுப்பாட்டை இழந்த வாழ்க்கையும், மற்றவர்களுக்கு வாழ்க்கை முறையும், சுற்றுப்புறமும், சூழலும் ஆயுட்காலத்தை நிர்ணயிக்கின்றன.

இந்த நிலையில் ‘நேச்சர்’ பத்திரிகையில் வெளியான ஆய்வு பலரையும் அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. ‘‘மூளையின் செயல்பாட்டை எந்த அளவுக்கு அதிகரித்துக் கொள்கிறீர்களோ, அந்தளவுக்கு உங்களின் ஆயுட் காலம் குறைகிறது...’’ என்பது அந்த ஆய்வின் சாராம்சம். இறந்துபோனவர்களின் மூளை திசுக்களை எடுத்து ஆய்வு செய்ததில் 90 முதல் 100 வயது வாழ்ந்தவர்களை விட 70 வயதுக்குள் இறந்துபோனவர்களின் மூளை அதிகமாக செயல்பட்டிருக்கிறது என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

Tags : Man, Life, Reduce, brain
× RELATED ஓஎம்ஆரில் ரூ1000 கோடி மதிப்பு ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு