சென்னை: சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னை எழும்பூர், மெரீனா, பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, சென்ட்ரல், சாந்தோம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் கும்பகோணம், திருவள்ளூர், நாகை, திருவாரூர், ராமநாதபுரம் மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.