×

சுஜித்தின் அழுகுரல் ஒலிக்கிறது; என் மனம் வலிக்கிறது: அமைச்சர் விஜயபாஸ்கர் எழுதிய கவிதை

சென்னை: சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்த கடந்த 25ம் தேதி முதல் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முகாமிட்டிருந்தார். குழந்தை பிணமாக மீட்கப்பட்ட பிறகு, மருத்துவமனையில் இருந்து அவர் எழுதிய கவிதை: நான் மட்டுமல்ல இந்த உலகமே தன் பிள்ளையாய் நினைத்த சுஜித்தின் அழுகுரல் என்னுள் இன்னும் ஒலிக்கிறது. என் மனம் வலிக்கிறது. எப்படியும் வந்துவிடுவாய் என்றுதான் ஊனின்றி உறக்கமின்றி இரவு பகலாய் இமைமூடாமல் உழைத்தோம். இப்படி எம்மை புலம்பி அழவிடுவாய் என்று எண்ணவில்லை. கருவறை இருட்டுபோல் உள்ளே இருப்பாய் என நினைத்தோம். கல்லறை இருட்டாய் மாறும் என்று எண்ணவில்லை.

மருத்துவமனையில் வைத்து உச்சபட்ச மருத்துவம் வழங்க நினைத்து காத்திருந்தேன். இப்போது மார்ச்சுவரியில் பார்க்கும் நிலையில் இதயம் கனத்துக்கிடக்கிறது .எண்பத்தைந்து அடி ஆழத்தில் நான் கேட்ட உன் மூச்சுச்சத்தம் தான் என்னை மீட்பு பணியில் ஒரு தந்தை ஸ்தானத்தில் பாச பிணைப்பில் இணைத்து இயங்க வைத்தது. மனதை தேற்றி கொள்கிறேன். ஏன் என்றால் இனி நீ கடவுளின் குழந்தை.... சோகத்தின் நிழலில் வேதனையின் வலியில்.. இவ்வாறு அந்த கவிதையில் கூறியுள்ளார்.


Tags : Vijayabaskar ,Sujit ,Sujith , Sujith, screams, sounds, minister Vijayabaskar, poetry
× RELATED முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு ஒத்திவைப்பு!