×

உண்மை நிலவரம் என்ன? ஐரோப்பிய எம்பி.க்கள் காஷ்மீரில் நேரில் ஆய்வு: பல இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல்

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் நிலவரம் குறித்து நேரில் ஆய்வு செய்வதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த 23 எம்பி.க்கள் நேற்று வந்தனர். அதே நேரம், மாநிலத்தின் பல பகுதிகளில் பாதுகாப்பு படைகளுக்கும், போராட்டக்காரர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் 370வது சட்டப்பிரிவை கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி மத்திய அரசு ரத்து செய்து உத்தரவிட்டது. இதன் காரணமாக இம்மாநிலத்தில் வன்முறைகள் நடப்பதை தடுக்க, ஊரடங்கு உத்தரவு, செல்போன் சேவை, இன்டர்நெட் சேவை ரத்து உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இவற்றை அரசு தற்போது விலக்கி கொண்டுள்ளது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் உண்மை நிலவரத்தை நேரில் ஆய்வு செய்வதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த 23 எம்பி.க்கள் அடங்கிய குழு, இரண்டு நாள் பயணமாக நேற்று ஜம்மு காஷ்மீர் வந்தது. இவர்கள் பலத்த பாதுகாப்புடன் குண்டு துளைக்காத கார்களில் சென்று, நகரில் பல்வேறு பகுதிகளை பார்வையிட்டனர். மக்களிடமும் உரையாடினர்.

அதே நேரம், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு படைகளுக்கும், போராட்டக்காரர்களுக்கும் மோதல் வெடித்தது. அவர்களை போலீசார்  விரட்டியடித்தனர். புல்வாமா மாவட்டத்தில் ரோந்து சென்று ராணுவ வீரர்கள் மீது, தீவிரவாதிகள் பதுங்கியிருந்து திடீரென துப்பாக்கியால் சுட்டனர். வீரர்களும் பதிலடி கொடுத்தனர். இந்த தாக்குதலில் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் வெளியிடப்படவில்லை. ஐரோப்பிய ஒன்றிய எம்பி.க்கள் குழுவின் வருகைக்கு மத்திய அரசு அனுமதி அளித்து இருப்பதை, காஷ்மீரை சேர்ந்த அரசியல் கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. இக்குழுவிடம் இருந்து உண்மை நிலவரத்தை மூடி மறைக்க முயற்சிப்பதாக மத்திய அரசு மீது குற்றம்சாட்டியுள்ளன. வெளிநாட்டு எம்பி.க்களை அனுமதிக்கும் முன்பாக, இந்திய எம்பி.க்கள் காஷ்மீர் செல்ல அனுமதி அளித்திருக்க வேண்டும் என்று பகுஜன், மார்க்சிஸ்ட் போன்ற கட்சிகள் கண்டித்துள்ளன. எம்பிக்கள் வருகை தந்துள்ள நிலையில், காஷ்மீரில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அப்பாவி ெதாழிலாளிகள் 5 பேர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags : MPs ,Terrorist attacks ,European ,places ,Kashmir , European MPs, Kashmir, Exploration, Terrorists
× RELATED டெல்லியில் தலைமைத் தேர்தல்...