×

டாக்டர்கள் ஸ்டிரைக்கிற்கு ஆதரவு நோயாளிகளின் உடல் நலனில் அக்கரை இல்லாத அரசு: செவிலியர் சங்கம் குற்றச்சாட்டு

நெல்லை: தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியல்கள் மேம்பாட்டு சங்கத்தின் மாநில தலைவர் கோபிநாதன், பொதுச்செயலாளர் சுபின் ஆகியோர் விடுத்துள்ள கூட்டறிக்கை: நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர்களை நியமிக்கவேண்டும், 10 ஆண்டுகளாய் முழுமையாக அமல்படுத்தப்படாமல் இருக்கும் டிஏசிபியை முழுமையாக அமல்படுத்தவேண்டும், முதுகலை மருத்துவர்களுக்கு கலந்தாய்வு நடத்தவேண்டும், கிராம சேவை செய்யும் அரசு டாக்டர்களுக்கு பட்ட மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு செய்யவேண்டும் என்ற கோரிக்கைகளை  வலியுறுத்தி கடந்த 25ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் மற்றும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வரும் அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் நியாயமான கோரிக்கைகளை உதாசினப்படுத்தியும், ஏழை நோயாளிகள் உடல் நலத்தில் அக்கரை இல்லாத இந்த அரசின் போக்கையும் எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

 மேலும் காலம் தாழ்த்தாமல் ஏழை மக்களின் நலன் கருதி டாக்டர்கள் சங்க கூட்டமைப்பினரை பேச்சுவார்த்தைக்கு அழைத்து அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டுமென தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் கேட்டுக்கொள்கிறது. மேலும் அவர்களின் நியாயாமான கோரிக்கைகள் நிறைவேற வாழ்த்துக்களையும், ஆதரவையும் தெரிவிக்கிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

Tags : Government ,doctors ,Nurses ,strike , Government's lack , concern, doctors' support for doctors' strike,Nurses' union allegation
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...