×

புதுச்சேரியில் பிகில் படத்தின் டிக்கெட் வாங்குவதில் ஏற்பட்ட பிரச்சனையால் தியேட்டருக்குள் அரங்கேறிய அடிதடி

புதுச்சேரி: புதுச்சேரியில் நடிகர் விஜய் நடித்த பிகில் படத்தின் டிக்கெட் வாங்குவதில் ஏற்பட்ட பிரச்சனையில் தியேட்டருக்குள்ளேயே ரசிகர்கள் சிலர் மோதிக்கொண்ட காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. புதுச்சேரியில் 14 திரையரங்குகளில் நடிகர் விஜய் நடித்த பிகில் திரைப்படம் கடந்த 25ம் தேதி வெளியிடப்பட்டது. அன்றே சில திரையரங்குகளில் பிளாக்கில் டிக்கெட் விற்றதாக இரண்டு ரசிகர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் காமராஜர் சாலையில் உள்ள தியேட்டரில் ரசிகர்கள் படம்  பார்த்த போது, ரசிகர்கள் படம் பார்க்கும் ஆவலில் சுவரை தாவி குதித்தும், முத்தியடித்தும் வந்ததால் போலீசார் லேசான தடியடி நடத்தி களைத்தனர். இந்த நிலையில் திங்கட்கிழமை இரவு கோரிமேடு செல்லும் சாலையில் உள்ள முருகா தியேட்டர் கவுண்டரில் டிக்கெட் வாங்கும் போது விஜய் ரசிகர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அதிக தொகை கொண்ட டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்று தீர்ந்துவிட 75 ரூபாய் டிக்கெட் வாங்க இந்த போட்டி,வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வெளியில் துவங்கிய இந்த வாக்குவாதம் படம் ஓடிக்கொண்டிருந்த போது தியேட்டருக்குள் மோதலாக மாறியது. இதனை தொடர்ந்து ரசிகர்களில் சிலர் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட செல்போன் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதில் காயமடைந்தவர்கள் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் ஒருவருக்கு மண்டை உடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக தன்வந்திரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Puducherry ,Pondicherry ,movie theater debut , Puducherry, in Big, ticket, trouble, theater, whacking
× RELATED உடல் பருமன் சிகிச்சையில் புதுச்சேரி...