×

முகப்பேர் பகுதியில் பட்டாசு வெடியில் வீடு தீப்பிடித்தது

அண்ணாநகர்: முகப்பேர் கிழக்கு கண்ணதாசன் தெரு சேர்ந்தவர் ராஜான்சுதன் (40). நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் வெடிக்கப்பட்ட ராக்கெட் ஒன்று இவரது வீட்டில் விழுந்ததில் தீவிபத்து ஏற்பட்டது. இதில், அங்கிருந்த துணிகள் தீப்பிடித்து  எரிந்து நாசமானது. விரைந்து தீ அணைக்கப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.  அதே பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (55). இவரது வீட்டின் பூஜை அறையில் வைத்து இருந்த விளக்கு விழுந்து தீப்பிடித்தது. இதுபற்றி உடனே தீயணைப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்
 சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த, ஜெ.ஜெ நகர் தீயணைப்பு போலீசார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.



Tags : area ,house ,Mugabe , ablaze , fireworks , Mugabe area
× RELATED அண்ணாமலை மீது கிரிமினல் வழக்குபதிவு...