×

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணி குறித்து பிரதமர் மோடிக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்

சென்னை: ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணி குறித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். 3 அமைச்சர்கள் மற்றும் நிபுணர்கள் நவீன கருவிகளுடன் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக பிரதமர் மோடியிடம் முதல்வர் தகவல் தெரித்தார். மேலும் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து 72 மணி நேரமாக நடைபெற்று வருகிறது என கூறினார். மீட்பு பணிகளை கண்காணிக்க 3 அமைச்சர்கள், ஆட்சியர்கள், வருவாய்த்துறை செயலர் உள்ளிட்டோர் மீட்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர் என கூறினார். மீட்பு பணிகளின் நிலையபை் பொறுத்து மேலும் உதவி கோரப்படும் என முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். கனரக துளையிடும் வாகனங்கள் மூலம் துளையிடும் பணி நடைபெற்று வருகிறது என கூறினார். என்.எல்.சி., ஓஎன்ஜிசி, என்ஐடி, எல்&டி வல்லுநர்கள் களத்தில் உள்ளனர் என கூறினார். ஒவ்வொரு முயற்சியும் ஒவ்வொரு கட்டத்தில் பின்னடைவை ஏற்படுத்தியதாக கூறினார். தீயணைப்பு, மீட்புப் படைகள், பேரிடர் குழுவினர் என பல அதிகாரிகள் களத்தில் உள்ளதாக கூறினார்.

ஆழ்துளை கிணற்றில் சிறுவன் சுஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி பிரார்த்தனை செய்வதாக தனது ட்விட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார். மேலும் அங்கு நடைபெறும் மீட்பு பணிகள் குறித்தும், சுஜித்தை பாதுகாப்பாக மீட்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி கேட்டறிந்தார். அந்த குழந்தையை காப்பாற்றுவதற்காக அப்பகுதியில் 4ம் நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், அந்த பகுதி மக்கள் என அனைவரும் அக்குழந்தையை வெளியே கொண்டுவருவதை மட்டுமே முக்கிய நோக்கமாக கருதி பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். போர்வெல் மூலம் துளையிடும் பணி முடிந்ததையடுத்து ரிக் இயந்திரம் மூலம் அகழ்ந்தெடுக்கும் பணி தொடங்கியது. போர்வெல் மூலம் பாறையில் 6 துளைகள் போடப்பட்டன. இந்நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் சிறுவன் சுஜித்தை மீட்கும் பணி குறித்து முதலமைச்சரிடம் கேட்டறிந்தது குறிப்பிடத்தக்கது.


Tags : Surjith Modi ,Edappadi Palanisamy ,Recovery , PM ,Edappadi Palanisamy ,briefs, PM ,Modi's recovery
× RELATED நிலையான கொள்கையே இல்லாத கட்சி பாமக: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்