×

புதிய புதிய வழிகளில் குழந்தையை மீட்கும் பணிகள் நடைபெறுகிறது: நடுகாட்டுப்பட்டியில் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

திருச்சி: நாளாவது நாளான இன்று மீண்டும் புதிய புதிய வழிகளில் குழந்தையை தேடும் பணியானது துரிதப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், அந்த பகுதி மக்கள் என அனைவரும் குழந்தையை வெளியே கொண்டுவருவதை மட்டுமே முக்கிய நோக்கமாக கருதி பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து குழந்தை நல்ல முறையில் மீட்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது என்று அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மீட்புப்பணி குறித்தும், குழந்தையின் தற்போதைய நிலை குறித்தும் கேட்டறிந்த பின் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களும் மற்றும் அமைச்சர்களும் தொடர்ந்து மீட்பு பணியை கண்காணித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களை தொலைபேசியில் அழைத்து அங்கு நடைபெறும் மீட்பு பணிகள் குறித்தும், சுஜித்தை பாதுகாப்பாக மீட்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும் அவர் கேட்டறிந்ததாகவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மீட்பு  பணியை மேலும் துரிதப்படுத்தக்கூடிய முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் குழந்தையை நல்ல முறையில் மீட்பதற்காக தனது பிரார்த்தனையும் தெரிவித்துள்ளார்கள். எனவே ஒட்டுமொத்த அரசுகளும், மத்திய, மாநில அரசுகள் குழந்தை சுஜித்தை நல்ல முறையில் மீட்க வேண்டும் என்ற தீவிரத்தில் இருப்பது தமக்கு ஆறுதலாக இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து மீட்பு பணியில் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


Tags : Pon.Radhakrishnan , New New Way, Child, Rescue Work, Intuition Bar, Pon.Radhakrishnan Interview
× RELATED வன்முறையில் தூண்டும் வகையில் பேச்சு...