×

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி தாமதமாகவே தொடங்கப்பட்டது: கரூர் எம்.பி.ஜோதிமணி குற்றச்சாட்டு

மணப்பாறை: ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நல்ல நோக்கத்துடன் மீட்பு பணிகள் நடைபெற்றாலும் ஒருசில தாமதங்கள் காரணமாக குழந்தையை மீட்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக கரூர் எம்.பி ஜோதிமணி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், நாடே தீபாவளி பண்டிகையை கொண்டாடும் இந்த நேரத்தில் தமிழகமெங்கும் சுர்ஜித்தை மீட்க போராடி வருவதாக தெரிவித்துள்ளார்.  தமிழகமெங்கும் உள்ள மக்கள் அனைவரும் சுர்ஜித் நலமுடன் மீண்டுவர பிரார்த்தனைகளும், ஆயிரக்கணக்கான மக்கள் சம்பவ இடத்திற்கு வருகின்ற ஒரு நெகிழ்ச்சியான சூழ்நிலையில் தாம் உள்ளதாக தெரிவித்துள்ளார். மீட்பு நடவடிக்கையை பொறுத்தவரையில் பெரிய முன்னேற்றம் இன்றி நடைபெற்று வருவதாகவும், பாறையானது கடினமாக இருப்பதால் துளையிட தாமதமாவதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பாறையை உடைக்க முடியாவிட்டால் மாற்று வழி குறித்து ஆராய வேண்டும் என எம்.பி ஜோதிமணி கூறியுள்ளார். இங்கு அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோர் நல்ல நோக்கத்துடனே பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். முதலில் ஏற்பட்ட தாமதம் காரணமாகவே தொடர்ந்து குழந்தையை மீட்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். தேசிய பேரிடர் மீட்புக்குழு தாமதமாக வந்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதனை அடுத்து, இறுதி முடிவு எடுக்க வேண்டிய தருணத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். எனவே முதலமைச்சர் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


Tags : Surjit ,Jodhimani ,Karur ,well , Deepu well, child, work, delay, Karur MP Jothimani, charge
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...