குழந்தை சுர்ஜித்தை மீட்பது குறித்து இறுதி முடிவெடுக்கும் தருணத்தில் உள்ளோம்: அமைச்சர் விஜயபாஸ்கர்

மணப்பாறை: ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தை சுஜித்தை மீட்பது குறித்து இறுதி முடிவெடுக்கும் தருணத்தில் உள்ளோம் என அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். குழந்தையை மீட்பது தொடர்பான மாற்று வழி குறித்து துணை முதல்வர் ஓ.பி.எஸ் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மீட்புக் குழு நிபுணர்களிடம் மாற்றி வழி குறித்து ஆலோசனை செய்து வருவதாக அமைச்சர் தகவல் அளித்துள்ளார். இதுவரை ரிக் இயந்திரம் மூலம் 40 அடி ஆழத்திற்கு மட்டுமே குழி தோண்டப்பட்டுள்ளது என அவர் விளக்கமளித்துள்ளார்.

Tags : Vijayabaskar ,Surjeet ,baby ,Minister Vijayabaskar , Baby Surjith, Minister Vijayabaskar, Manapparai, Natukkattuppatti
× RELATED அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் இல்லை