×

இன்றைக்குள் சிறுவன் சுஜித்தை மீட்கும் பணிகள் நிறைவடையும் என நம்புகிறோம்: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

திருச்சி : இன்றைக்குள் சிறுவன் சுஜித்தை மீட்கும் பணிகள் நிறைவடையும் என நம்புகிறோம் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துறை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சுஜித்தை மீட்கும் பணிகள் 43 மணி நேரத்தை கடந்து மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் மீட்புப் பணிகள் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், மீட்பு பணிகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி தொலைபேசியில் தொடர்ந்து கேட்டறிந்து வருகிறார். மீட்பு பணியில் 70 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டுள்ளனர். கடினமான பாறைகள் என்பதால் துளையிடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தற்போது உள்ள இயந்திரத்தை விட 3 மடங்கு வேகம் கொண்ட மற்றொரு இயந்திரம் வந்துக்கொண்டிருக்கிறது. அதிர்வு ஏற்படும் என்பதால் வேகமாக செயல்பட இயலவில்லை.

குழந்தையின் கை தெரிகிறது, ஆனால் அசைவு இல்லை. நேற்றிரவு (அக்.,26) குழந்தையின் உடல் உஷ்ணம் சராசரியாக இருந்ததை அண்ணா பல்கலை., குழுவினர் கண்டறிந்துள்ளனர். மீட்பு பணிகள் தொய்வின்றி நடந்து வருகிறது. பாதுகாப்புடன் குழந்தையை மீட்க வேண்டும் என்பதால் கவனமுடன் செயல்படுகிறோம். சுற்றிலும் இடைவெளி இல்லாமல் குழந்தை சுர்ஜித் சிக்கியுள்ளான். நேற்று முதல் குழந்தையின் கையில் அசைவு தெரியவில்லை. ரோபோ கேமரா உள்ளே சென்று குழந்தையின் கையில் வெப்பத்தை பதிவு செய்தது. பண்டிகை என்பதையும் மறந்து இரவு பகலாக இடைவிடாது மீட்புப் பணியில் முழு மூச்சில் ஈடுபட்டுள்ளோம். 88 அடியில் சிறுவன் சிக்கி உள்ள நிலையில் 21 அடி இதுவரை தோண்டப்பட்டுள்ளது. மேலும், கீழே செல்லாத வகையில் குழந்தையின் கை பிடித்து வைக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் இன்றைக்குள் நிறைவடையும் என நம்புகிறோம் என்றார்.

Tags : Health Minister ,Sujith ,recovery , The boy is Sujith, Minister of Works and Health, Vijayabaskar
× RELATED டெல்லியில் மீண்டும் முழு ஊரடங்கு...