×

70 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தை சுர்ஜித் 80 அடி ஆழத்திற்கு சென்றுவிட்டதாக தகவல்: மீட்புப் பணியில் குழுவினர்

திருச்சி: ஆழ்துளை கிணற்றில் 70 அடி ஆழத்தில் இருந்த குழந்தை 80 அடி ஆழத்திற்கு சென்று விட்டது. திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தையை மீட்கும் பணி 22 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்கிறது. ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை கை போன்ற ஹைட்ராலிக் கருவி மூலம் தூக்க முயற்சி நடைபெற்று வருகிறது. குழந்தை உள்ள ஆழ்துளை கிணறு அருகே சுரங்கம் போன்ற குழி தோண்ட திட்டமிடப்பட்டுள்ளது. என்எல்சி தனியார் அமைப்பு இணைந்து போர்வெல் அமைக்கும் கருவி மூலம் குழி தோண்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த கட்ட மீட்பு நடவடிக்கை பற்றி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்தார்.

மீட்பு பணி நடைபெற்றுவரும் இடத்திற்கு தீயணைப்புத்துறை கூடுதல் காவல்துறை இயக்குநர் காந்தி ராஜன் வருகை தந்துள்ளார். மேலும் மீட்கும் பணி 23 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணியை தீயணைப்புப் படை டிஜிபி காந்திராஜன் நேரில் ஆய்வு செய்தார். ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை கை போன்ற ஹைட்ராலிக் கருவி மூலம் தூக்க முயற்சி செய்து வருகின்றனர். மேலும் குழந்தை சுர்ஜித் மீண்டுவர வேண்டி மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். மஞ்சம்பட்டி குழுவினரின் கருவி குழந்தை சுர்ஜித்தின் தலையை கவ்வி பிடித்ததாக கூறப்பட்டுள்ளது. இன்னும் சிறிது நேரத்தில் குழந்தை மீட்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது.


Tags : Surjit ,well ,baby , Surjit's baby ,trapped, deep well ,70 feet,80 feet
× RELATED நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம் மூலம்...