×

பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு நீதிமன்றம் ஜாமீன்

லாகூர்:  பாகிஸ்தான் பிரதமராக இருந்தவர் நவாஸ் ஷெரீப். பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியை சேர்ந்த இவர், அல் அஜிஜியா பண மோசடி வழக்கில் 7 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.இந்நிலையில், நோய் எதிர்ப்பு  சக்தி நோய் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள ஷெரீப்பின் ரத்த தட்டுகளின் எண்ணிக்கை குறைந்தது. இதனால், கடந்த திங்கட்கிழமை லாகூர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரின் நிலைமை மோசமானதால், நவாசின்  சகோதரரான சாபாஷ் ஷெரீப், நவாசுக்கு ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார்.  இதை ஏற்று லாகூர் உயர் நீதிமன்ற நீதிபதி பாகர் நஜாபி தலைமையிலான அமர்வு, நவாசுக்கு நேற்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.


Tags : Nawaz Sharif ,Court ,Pak , Former prime minister of Pakistan, Nawaz Sharif, on bail
× RELATED சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்