×

கூண்டுகளில் அடைக்கும் கொடூரம் கோழி பண்ணைகளுக்கு கட்டுப்பாடு: மத்திய அரசு சட்டம் தயார்

புதுடெல்லி: கோழிகள் வளர்ப்பு மற்றும் வேறு இடங்களுக்கு கொண்டு ெசல்வது தொடர்பான ஒழுங்குமுறை வரைவு விதிகளை மத்திய அரசு இறுதி செய்துள்ளது.  தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு,  விலங்குகளுக்கான மக்கள் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்களின் சார்பில், கோழிகள் ஒயர்களால் ஆன சிறிய கூண்டுகளில் அடைத்து கொடுமையான முறையில் வளர்க்கப்படுவதாக பொது நலன் மனுக்கள்  தாக்கல் செய்யப்பட்டது.   மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், பஞ்சாப் மற்றும் ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் உயர் நீதிமன்றத்தில் இருந்த கோழி வளர்ப்பு தொடர்பான மனுக்களை உச்ச நீதிமன்றம் டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டிருந்தது.  இந்த வழக்கு தற்போது டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகின்றது.

இதனையடுத்து சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் கமிட்டி ஒன்றை அமைத்து கோழிகள் வளர்ப்பு குறித்த வழிகாட்டுதல் நெறிமுறைகளை உருவாக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.  நேற்று இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றதத்தில்  தலைமை நீதிபதி படேல் மற்றும் நீதிபதி ஹரிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் நிலைக்குழு வழக்கறிஞர் ஜஸ்மீத் சிங் ஆஜரானார். அப்போது அவர், கோழிகள் வளர்ப்பு, வேறு  இடங்களுக்கு கோழிகளை கொண்டு செல்வது மற்றும் கோழி பண்ணைக்கான ஒழுங்குமுறை வரைவு விதிகளை மத்திய அரசு  தயாரித்துள்ளதாக தெரிவித்தார்.இதனை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரி 20ம்  தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் வரைவு விதிகள்  படித்து அதற்கான கருத்துக்களை வழங்கும்படியும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.



Tags : poultry farms ,Central , Cruelty Poultry Farm, Central Government
× RELATED நெல்லியாளம் நகராட்சி அலுவலகம்...