×

நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கு டாக்டர் வெங்கடேசனுக்கு நவ.7 வரை காவல் நீட்டிப்பு

தேனி : மருத்துவக்கல்லூரிகளில் சேர்வதற்கான நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் உதித்சூர்யா, அவரது தந்தை டாக்டர் வெங்கடேசனை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து மாணவர்கள் பிரவீன், ராகுல், இவர்களது தந்தை சரவணன், டேவிட், மாணவி பிரியங்கா, அவரது தாய் மைனாவதி ஆகியோரும் கைதாகினர். இதில் மாணவர் உதித்சூர்யா நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். டாக்டர் வெங்கடேசனின் நீதிமன்ற காவல் நிறைவடைந்ததையடுத்து, நேற்று தேனி குற்றவியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது காவலை மாஜிஸ்திரேட் பன்னீர்செல்வம், நவ. 7ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். அதன்படி அவர் மீண்டும் சிைறயில் அடைக்கப்பட்டார்

Tags : Venkatesan , Extension of custody, Neet Victim Transition Case ,Dr Venkatesan
× RELATED டிராக்டரில் குடிநீர் விற்பனை...