×

கண்மாயில் கொட்டப்படும் பிளாஸ்டிக், இறைச்சி கழிவுகள்: நோய் அச்சத்தில் மக்கள்

மானாமதுரை: மானாமதுரை சிப்காட் பெரியகண்மாயில் கொட்டப்படும் பிளாஸ்டிக், இறைச்சி கழிவுகளால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளதாக ராஜேந்திரன் நகர், தயாபுரம் பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மானாமதுரை சிப்காட் செல்லும் வழியில் தாலுகா அலுவலகத்தின் தெற்கு பகுதியில் சிப்காட் பெரியகண்மாய் உள்ளது. இந்த கண்மாய் மூலம் 100 ஏக்கரில் விவசாயம் நடந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்த கண்மாயில் இருந்து விருதுநகர் அகலப்பாதை பணிக்காக செம்மண் ஏழு அடி ஆழத்திற்கு தோண்டப்பட்டதால் மடைகள் மேடாகி தண்ணீர் தேங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. அதன்பின் கண்மாயை நம்பிய நிலங்கள் தரிசாகின. வேறுவழியின்றி அந்த நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்பட்டன. இதனால் தண்ணீர் தேக்க முடியாத கண்மாயில் பிளாஸ்டிக் கழிவுகள், கோழி இறைச்சி கழிவுகள் கொட்டப்படும் குப்பைத் தொட்டியாக கண்மாய் மாறி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், சிப்காட் தயாபுரம் பகுதியில் உள்ள கடைகளில் வீணாகிய கழிவுகள் கண்மாய்க்குள் கழிவுகள் முழுவதும் அருகே உள்ள சிப்காட் கண்மாய்க்குச் செல்கிறது. கண்மாயில் நீர் அதிகம் இருக்கும்போது, விவசாயத்துக்காக பயன்படுத்தப்படும் பாசன நீருடன் கலந்தால் பயிர்கள் மூலம் ரசாயனம் மனிதருக்கு பாதிப்பை ஏற்படுத்தும். தற்போது கண்மாய் நீர் வற்றிக் கிடக்கிறது. ஆனால் வீடுகளில் இருந்து எடுக்கப்படும் செப்டிக்டேங்க் கழிவுநீரும் இந்தக் கண்மாய்க்குள் குட்டைபோல் தேங்கிக் கிடக்கிறது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே கண்மாயை குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வார வேண்டும். ரோட்டிற்கு மேற்கு பகுதியில் உள்ள சின்னக் கண்மாயிலும் கருவேல மரங்களை அகற்றி கண்மாய் கரைகளை பலப்படுத்த வேண்டும் என்றனர்….

The post கண்மாயில் கொட்டப்படும் பிளாஸ்டிக், இறைச்சி கழிவுகள்: நோய் அச்சத்தில் மக்கள் appeared first on Dinakaran.

Tags : Manamadurai ,Rajendran Nagar, Dayapuram ,Chipkat ,Periyakanmai ,Kanmai ,
× RELATED மானாமதுரை ரயில் நிலையத்தில் பூட்டியே கிடக்கும் பாத்ரூம்: திறக்க கோரிக்கை