×

திருவள்ளூர் மாவட்டம் நேமத்தில் கல்கி சாமியார் தங்கி உள்ளதாக ஆசிரம நிர்வாகம் விளக்கம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் நேமத்தில் கல்கி சாமியார் தங்கி உள்ளதாக ஆசிரம நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. கல்கி ஆசிரமத்தில் வருமான வரி சோதனைக்கு முழுஒத்துழைப்பு அளிக்கப்படுவதாக நிர்வாகி சுனில் தேசாஜி தகவல் அளித்துள்ளார். அரசுத்துறையின் பல்வேறு அமைப்புகள் ஏற்கனவே கல்கி ஆசிரமத்தில் சோதனை நடத்தி உள்ளன. தற்போது வருமான வரித்துறை அதிகாரிகளும் கல்கி ஆசிரமத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பக்தர்கள் எப்போது வேண்டுமானாலும் கல்கி சாமியாரை ஆசிரமத்தில் சந்திக்கலாம் என நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : ashram administration ,Thiruvallur ,Kalki ,monarch ,district , Tiruvallur District, Nemat, Kalki Samyar, Ashram Administration, Illustration
× RELATED திருவள்ளூரில் பெயிண்ட்...