பேருந்து நிலையங்களை சுத்தமாக பராமரிக்க கோரி வழக்கு: வருவாய் நிர்வாக செயலாளர் பதில் மனு தாக்கல்

சென்னை: பேருந்து நிலையங்களை சுத்தமாக பராமரிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கில் வருவாய் நிர்வாக செயலாளர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். பேருந்து நிலையங்கள் பராமரிப்பு குறித்து மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை கேட்டுள்ளதாக வருவாய் நிர்வாக செயலாளர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் பேருந்து நிலையங்கள் சுகாதார சீர்கேடாக உள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் ராதாகிருஷ்ணன் என்பவர் பொதுநல மனு தொடர்ந்தார்.


Tags : cleanup ,bus stations ,Revenue Executive Secretary Bus Stations ,Revenue Executive Secretary , Bus Stations, Cleaning, Case, Revenue Executive Secretary, Petitioner, Chennai HC
× RELATED மதுரை பஸ் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு