×

ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு 3,965 சிறப்பு பேருந்துகள் அக். 20,21,22ல் இயக்கம்:போக்குவரத்து துறை தகவல்; 3 பேருந்து நிலையங்களில் இருந்து பயணிகளின் வசதிக்காக பஸ்கள் இயக்கம்

சென்னை: ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு அக்.20,21,22ம் தேதிகளில் 3,965 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.  இது குறித்து போக்குவரத்து துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு தினசரி இயக்கப்படுகின்ற 2,100 பேருந்துகளுடன் அக்.20, 21, 22 ஆகிய தேதிகளில் கூடுதலாக சென்னையிலிருந்து 2,265 சிறப்புப் பேருந்துகளையும் பெங்களூரு, கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய முக்கிய தொழில் நகரங்களிலிருந்து பிற பகுதிகளுக்கு 1,700 சிறப்புப் பேருந்துகளையும் இயக்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்ற சில தடப்பேருந்துகள், தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிறுத்தம் மற்றும் பூந்தமல்லி பைபாஸ் (மா.போக பூவிருந்தவல்லி பணிமனை அருகில்) ஆகிய இடங்களில் இருந்து இயக்கப்படும். தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிறுத்தத்தில் இருந்து திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள். போளூர், சேத்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள். திண்டிவனம் வழியாக பண்ருட்டி நெய்வேலி, வடலூர். சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

பூந்தமல்லி பைபாஸ் (மா.போக பூவிருந்தவல்லி பணிமனை அருகில்) இருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து மேற்குறிப்பிட்டுள்ள ஊர்களை தவிர இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் (புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் வழி ECR), மயிலாடுதுறை, தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டிணம், வேளாங்கண்ணி, அரியலூர், ஜெங்கொண்டம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ஊட்டி, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர் பெங்களூரு, திருவனந்தபுரம் மற்றும் குருவாயூர் ஆகிய இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும். www.tnstc.in மற்றும் tnstc செயலி மூலமாக முன்பதிவு செய்யலாம்.

The post ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு 3,965 சிறப்பு பேருந்துகள் அக். 20,21,22ல் இயக்கம்:போக்குவரத்து துறை தகவல்; 3 பேருந்து நிலையங்களில் இருந்து பயணிகளின் வசதிக்காக பஸ்கள் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Ayudha Puja festival ,CHENNAI ,Dinakaran ,
× RELATED AI குரல் குளோனிங்கைப் பயன்படுத்தி...