×

அமிதாப் பச்சன் டிஸ்சார்ஜ்

மும்பை: நடிகர் அமிதாப்பச்சனுக்கு கல்லீரல் கோளாறு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால், மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில், வழக்கமான மருத்துவ சோதனைக்காகத்தான் அவர் சேர்க்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். உடல்நிலை குறித்து வதந்தி பரவிய நிலையில்,

தற்போது அமிதாப்பச்சனுக்கு உடல்நிலை சீராக இருப்பதாகவும், நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 11ம் தேதிதான் அமிதாப் 77வது பிறந்தநாளை கொண்டாடினார். பாலிவுட் திரையுலக பிரபலங்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

Tags : Amitabh Bachchan , Amitabh Bachchan, discharged
× RELATED மும்பையில் இருந்து 700 புலம்பெயர்...