×

மிரட்டல் எதிரொலி அசாம் என்ஆர்சி ஒருங்கிணைப்பாளர் ம.பி.க்கு மாற்றம்

புதுடெல்லி: அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் (என்ஆர்சி) ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் பிரதீக் ஹஜிலா. இவரது மேற்பார்வையில் அந்த மாநிலத்தில் குடிமக்கள் பதிவு பட்டியல் இறுதி செய்யப்பட்டு ெவளியிடப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி வெளியிடப்பட்ட இறுதி பட்டியலில் 19 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஹஜிலாவுக்கு வெளிப்படையான மிரட்டல் வந்துள்ளது. இதைதொடர்ந்து உச்ச நீதிமன்றம் அவரை மத்திய பிரதேசத்துக்கு மாற்றம் செய்ய மத்திய, மாநில அரசுகளை அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான உச்ச நீதிமன்ற சிறப்பு அமர்வு,  ஹஜிலாவை மத்திய பிரதேசத்துக்கு இடமாற்றம் செய்ய நேற்று உத்தரவிட்டது.


Tags : Assam NRC ,Coordinator MP Transition ,Coordinator MP , Intimidation, Assam, NRC Coordinator, MP
× RELATED ஈரோட்டில் கட்டி முடித்து ஒரு ஆண்டாக...