×

மாணவர்களின் நலன் கருதி நடவடிக்கை: நாடு முழுவதும் முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு: மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் டுவிட்.!!!

டெல்லி: நாடு முழுவதும் முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரசின் 2ம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக நேற்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்தது. தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் 10,12ம் பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு மாநிலங்கள் வலியுறுத்தி வந்தன. இதற்கிடையே, திமுக தலைவரும் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், கொரோனா பரவல் அதிகரித்து உயிரிழப்பும் உயர்ந்து கொண்டே செல்வதால் சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டது. கொரோனா சிகிச்சையில் மருத்துவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில் மருத்துவ மேற்படிப்புக்கு நீட் தேர்வு அவசியமா? எனவும் கேள்வி எழுப்பியிருந்தார்.  இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில், இளம் மருத்துவ மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்க மத்திய அரசு முடிவு  செய்துள்ளது. முதுநிலை நீட் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். கொரோனா பரவல் காரணமாக வரும் 18-ம் தேதி ஞாயிற்றுகிழமை நடைபெறவிருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.   MBTS, BDS, BAMS, BSMS, BUMS மற்றும் BHMS படிப்புகளில் சேருவதற்கு நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வானது ஆகஸ்ட் 1-ம் தேதி 2021 ஞாயிற்றுகிழமை நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. …

The post மாணவர்களின் நலன் கருதி நடவடிக்கை: நாடு முழுவதும் முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு: மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் டுவிட்.!!! appeared first on Dinakaran.

Tags : Union Health Minister ,Harshvardhan Dwitt ,New Delhi ,Harsh Vardhan ,Corona ,Harshvardhan Dwitt. ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு