×

வரும் 25ம் தேதி வரை எம்.டி ஓமியோபதி படிக்க விண்ணப்பிக்கலாம்

சென்னை: இந்திய மருத்துவம், ஓமியோபதி இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது: 2019-20 கல்வியாண்டுக்கு கன்னியாகுமரி மாவட்டம்,  குலசேகரத்தில் செயல்பட்டுவரும் சாரதா கிருஷ்ணா ஓமியோபதி மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீடு இடங்கள்/ நிர்வாக ஒதுக்கீடு (சிறுபான்மையினர் மற்றும் சுயநிதி) எம்.டி ஓமியோபதி இடங்களுக்கு ஏஐஏபிஜிஇடி-2019 தேர்வில் தகுதி  பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  விண்ணப்பங்களை பதிவிறக்கலாம். விண்ணப்ப படிவத்தை அக்டோபர் 17ம் தேதி முதல் 25ம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் அக்டோபர் 25ம் தேதி மாலை 5.30 மணிக்குள் இயக்குனர், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை, அரும்பாக்கம், சென்னை என்ற முகவரிக்கு வந்து சேர வேண்டும்.


Tags : MD Omopathy , You, study MD ,Omopathy
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...