×

18 லட்சம் மதிப்பில் எஸ்.பி.க்கு சொகுசு கார் பரிசளித்த முருகன்

திருச்சி:  திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரியில் கடந்த 2ம் தேதி அதிகாலை 13 கோடி மதிப்புள்ள 29 கிலோ தங்கம், வைரம் மற்றும் பிளாட்டின நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்தகொள்ளையில் திருவாரூர் சீராத்தோப்பை சேர்ந்த முருகன் தலைமையிலான கும்பல் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக திருவாரூரை சேர்ந்த மணிகண்டன், முருகனின் சகோதரி கனகவல்லி, முருகனின் கூட்டாளி மதுரையை சேர்ந்த கணேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். முருகன் பெங்களூரு நீதிமன்றத்திலும், கனகவல்லியின் மகன் சுரேஷ் செங்கம் நீதிமன்றத்திலும் சரணைடந்தனர். இந்த கும்பலிடம் இருந்து 23 கிலோ அளவுக்கு நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவர்களில் சுரேஷிடம் 7 நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து, போலீசார் அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். 2வது நாளாக நேற்றும் விசாரணை நடந்தது. விசாரணையில் பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுபற்றி, திருச்சி தனிப்படை போலீசார் தெரிவித்ததாவது:  கொள்ளை விவகாரத்தில் திருவாரூர் போலீசிடம் முருகன் எப்போதுமே நெருக்கமாக இருந்துள்ளான். கொள்ளையடித்து விட்டு வரும்போதெல்லாம், திருவாரூர் போலீசாருக்கு நகை, பணத்தை அள்ளி வழங்கி உள்ளான். சில ஆண்டுகளுக்கு முன் திருவாரூர் எஸ்.பி.யாக இருந்த ஒருவருக்கு, முருகன் 18 லட்சம் மதிப்புடைய விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கி கொடுத்தது தெரியவந்துள்ளது. அந்த எஸ்.பி.க்கு இரு மனைவிகள் உள்ளனர். அவர்களுக்கு வேண்டிய டிசைனில் நகைகளை முருகன் வாங்கி கொடுத்துள்ளான். இதனால் எஸ்.பி. குடும்பத்துடன் முருகன் நெருங்கி பழகியதால் திருவாரூர் மாவட்டத்தில் முருகன் மீது எந்த வழக்குகளும் இல்லை.  மதுரையில் ஒரு நகைக்கடை அதிபர் வீட்டில் 1500 பவுன், இன்னொரு நகைக்கடை அதிபர் வீட்டில் 150 பவுன், லலிதா ஜூவல்லரி மற்றும் நம்பர் 1 டோல்கேட் பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகிய இடங்களில் முருகன் கும்பல் கைவரிசை காட்டி உள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Murugan ,SP , Murugan presents luxury car to SP , Rs 18 lakh ,
× RELATED ராமேஸ்வரத்தில் முருகன் கோயில் வாசலை...