×

பேனர் விழுந்து ஐடி பெண் பலியான வழக்கு மருமகளை வரவேற்பதற்காக வேறு ஒருவர் மகளை கொல்வதா?

*அதிமுக பிரமுகர் ஜெயகோபாலுக்கு ஐகோர்ட் கண்டனம்

சென்னை: தன் மருமகளுக்கு திருமண வரவேற்பு வைப்பதற்காக இன்னொருவரின் மகளை கொல்வதா என்று பேனர் விழுந்து ஐடி பெண் இறந்த வழக்கில் ஜாமீன் கேட்ட அதிமுக பிரமுகர் ஜெயபால் தரப்புக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னை பள்ளிக்கரணையில் செப்டம்பர் மாதம் 12ம் தேதி சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்து ஸ்கூட்டியில் வந்த சுப என்ற பெண் கீழே விழுந்ததில் பின்னால் வந்த லாரி ஏறி உடல் நசுங்கி பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக நிர்வாகி ஜெயகோபால் அவரது உறவினர் மேகநாதன் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கடந்த 27ம் தேதி இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். கடந்த 12 நாட்களாக சிறையில் இருக்கும் இவர்கள் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.  இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பு வக்கீல், மகளின் திருமண வரவேற்புக்காக பேனர் வைக்கப்பட்டது. இதில் மனுதாரர் தரப்பில் தவறு எதுவும் இல்லை என்றார். இதைகேட்ட நீதிபதி, தவறு இல்லை என்றால் ஏன் ஓடி ஒளிந்தீர்கள். மருமகளின் திருமண வரவேற்புக்காக வேறு ஒருவரின் மகளை பலியாக்குவதா என்று கண்டனம் தெரிவித்ததுடன் இந்த வழக்கில் அரசு தரப்பு பதில் தருமாறு உத்தவிட்டு விசாரணையை வியாழக்கிழமைக்கு தள்ளிவைத்தார்.

Tags : IT girl ,daughter-in-law , Banner falls, IT girl kills daughter ,daughter-in-law?
× RELATED 9 ஆண்டுக்கு முன் இறந்த தொழிலதிபரின்...