×

வேதாரண்யம் தாலுகா வெள்ளப்பள்ளத்தில் லாரியில் தண்ணீர் வாங்கி ஊற்றி பயிரை காப்பாற்றும் விவசாயிகள்

வேதாரண்யம்: வேதாரண்யம் தாலுகாவில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் மழையை நம்பி நெல் சாகுபடி செய்யும் மானாவாரி பகுதியாகும். தற்சமயம் தொடர்ந்து பெய்த மழையால் வௌ்ளப்பள்ளம், புஷ்பவனம், பெரியகுத்தகை உட்பட்ட பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் வயல்களில் சம்பா நெல் விதைத்தனர். நெற்பயிர் நன்றாக வளந்துவிட்ட நிலையில், கடந்த 15 நாட்களாக கடும் வெயிலின் காரணமாக நெற்பயிர்கள் கருக துவங்கியுள்ளது. இதனால் நல்ல மகசூலை தரும் என்று நம்பி இருந்த விவசாயிகளுக்கு மிகுந்த ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. தற்போது கடும் வெயிலின் காரணமாக நெற்பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி விவசாயிகள் பெரும் கவலை அடைந்து சம்பா சாகுபடியை காப்பாற்ற நெற்பயிருக்கு டேங்கர் லாரி மூலம் தண்ணீர் இறைத்து வருகின்றனர்.வௌ்ளப்பள்ளத்தில் கருகி வரும் நாற்றாங்காலை காப்பாற்ற ஒரு டேங்கர் லாரி 650 கொடுத்து வாங்கி தண்ணீர் தெளிக்கின்றனர். மழை பெய்தால் மட்டுமே இப்பகுதி விவசாயத்தை பாதுகாக்க முடியும் என விவசாயிகள் தெரிவித்தனர். மழை வேண்டி பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகளும் விவசாயிகள் செய்து வருகின்றனர்.

Tags : floodplain ,Vedaranyam taluk ,Vedaranyam , Vedaranyam
× RELATED வேதாரண்யம் அருகே குடிதண்ணீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் மறியல்