×

அமெரிக்காவில் நடந்த குடும்ப வன்முறையை இந்திய நீதிமன்றம் விசாரிக்க முடியும்: ஐகோர்ட் தீர்ப்பு

மும்பை: அமெரிக்காவில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருபவர் முகமது ஜுபேர் பரூக்கி. இவருக்கு கடந்த 2008ம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தம்பதி இருவரும் அமெரிக்காவுக்கு சென்றுவிட்டனர்.  ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு முகமது ஜுபேர் பரூக்கி தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டார். இதைத் தொடர்ந்து இந்தியா திரும்பிய பரூக்கியின் மனைவி, அவருக்கு எதிராக இந்திய நீதிமன்றத்தில் குடும்ப வன்முறை புகார்  அளித்தார். இதை விசாரித்த முலுண்ட் மெட்ரோபாலிட்டன் நீதிமன்றம், பரூக்கி தனது மனைவி மற்றும் குழந்தைக்கு மாதம் தோறும் 30,000 மற்றும் 15,000 பராமரிப்பு தொகை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

பரூக்கி இதை எதிர்த்து செசன்ஸ் கோர்ட்டில் அப்பீல் செய்தார். ஆனால் செசன்ஸ் கோர்ட்டும் அந்த உத்தரவை உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து பரூக்கி மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகினார். உயர் நீதிமன்றம் இப்போது, கீழ் கோர்ட்  உத்தரவுக்கு ஏற்ப பரூக்கி தன் மனைவி மற்றும் குழந்தைக்கு பராமரிப்பு தொகை வழங்க 4 வாரம் கால அவகாசம் வழங்கியிருக்கிறது.Tags : Indian Court of Inquiry into Family Violence ,United States ,Indian Court of Inquiry , United States, Indian Court, iCord
× RELATED அமெரிக்காவின் விஸ்கான்சின் பகுதியில்...