×

பெரம்பலூர் கலெக்டர் அலுவலக சாலையில் கற்றாழை ஜூஸ் விற்பனை படுஜோர்

பெரம்பலூர்: பெரம்பலூர் கலெக்டர் அலுவலக சாலையில் காலையில் கற்றாழை ஜூஸ் விற்பனை மும்முரமாக நடக்கிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் மலையடிவார பகுதிகளில் கற்றாழை அதிகம் காணப் படுகிறது. தமிழில் இந்தத் தாவரம் கற்றாழை, கத்தாளை, குமரி, கன்னி என அழைக்கப்படுகிறது. நுனியில் பெரும்பாலும் சிறு முட்களுடன் காணப்படும். மடல், வேர் ஆகியவை மருத்துவப் பயனுள்ளவையாகும். அழகு சாதனப் பொரு ட்கள் தயாரிப்பில் கற்றாழை பெருமளவு பயன்படுத்தப்படுகின்றது. சித்தா மற்றும் ஆயுர் வேத மருத்துவத்தில் கற்றாழைச்சாறு(ஜூஸ்), இருமல், சளி, குடல்புண் ஆகியவற் றிற்கு மருந்தாகப் பயன்படுகின்றது. கடும் வயிற்றுப்புண், தோலில் ஏற்படும் தீக்காயம், அரிப்பு வெட்டுக்காயங்கள் ஆகியவற்றிற்கும் மருந்தாக பயன் படுகின்றது. குடல்புண், வயிற்றுப்புண்ணை சரி செய்வது, மலச்சிக்கலைப் போக்குவது, குளிர்ச்சியை த்தருவது எனப் பலருக்கும் தேவைப்படும் மருத்துவ குணமிருப்பதால் பெரம்பலூர் நகரவாசிகளிடம் இதன் தேவை அதிகரித்துள்ளது. இதனையறிந்து பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, மேலமாத்தூர் பகுதியைச்சேர்ந்த கிருஷ் ணமூர்த்தி மகன் மணிக ண்டன் (38) என்பவர் பெரம் பலூர் பாலக்கரையிலிருந் து கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் கற் றாழை ஜூஸ் தயாரித்து விற்று வருகிறார். பெரம்ப லூரில் குளிர்ச்சிக்காக முலாம்பழம், எலுமிச்சைப் பழம் தர்பூசணி ஆகியனவும், சத்துக்காக ஆப்பில், சாத்துக்குடி, மாதுளை, பேரீச்சம்பழ ஜூஸ்கள் விற்கப் பட்டாலும், மருத்துவ பயன் பாட்டிற்காக ஜூஸ் வாங்கி ச் சாப்பிடுவது கற்றாழைக்காக மட்டுமே. இதனை சாப் பிட பெரம்பலூர் நகரவாசி கள் கலெக்டர் அலுவலக சாலை, நீதிமன்ற சாலை, மாவட்ட விளையாட்டு மைதானங்களில் கலைநே ரத்தில் வாக்கிங், ஜாக்கிங் செல்வோர் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் என்பதால் தினமும் நூற் றுக் கணக்கானோர் காலையில் கற்றாழை ஜூ சுக்காகக் காத்திருந்து வா ங்கிப் பருகிச் செல்லுகின்றனர்.

இதுகுறித்து ஜூஸ் வியாபாரி மணிகண்டன் தெரி விக்கையில், சோற்றுக் கற்றாழையில் நான் ஜூஸ் போட் டுத் தருவது மலைக் கற்றாழையாகும். இதற் காக தினமும் மறுநாளுக் குத் தேவையான மலைக் கற்றாழைகளை சிறுவாச்சூர், பாடாலூர், ரெங்கநாத புரம், சாத்திரமனை, தம்பி ரான்பட்டி, மலையடிவாரங் களில் தேடிச்சென்று பருவம் எய்தி பூப்பூத்த கற்றாழைகளாகப் பார்த்து பிடுங் கி எடுத்துவந்து, உள்ளிருக் கும் நொங்கினை வழித்து கசப்பின்றி சுத்தப்படுத்தி, அதில் புதினா, மல்லி சாறு கலந்து விற்பனை செய்கி றேன். மூல வியாதிக்கும், சிறுநீரகக் கோளாறுக்கும் மிகச்சிறந்த மருந்து இது வாகும். இதனை குறைந்த விலைக்கு ரூ.20க்கு விற்பனை செய்கிறேன். வயிற்றுப்புண், கனச்சூடு, வெள்ளைப்படுதல் உள்மூலம், வெளி மூலம் மலச் சிக்கல், கிட்னி கல் கரைதல், தீராத வயிற்று வலி போன்றவற்றிற்கும் சிறந்த நிவாரணம் தரக்கூ டியதாகும் எனத் தெரிவித் தார்.

Tags : Aloe Juice Sale Padujour ,Perambalur Collector Office Road , Cactus
× RELATED சென்னை கபாலீஸ்வரர் கோயில் நிலத்தில்,...