×

தனியார் ரயிலில் அறிமுகமான ஒரு வாரத்தில் கடுமையான கட்டண உயர்வு : ரயில்வே வழங்கும் எந்த சலுகையும் தனியார் ரயிலில் இல்லை

டெல்லி : டெல்லி- லக்னோ இடையே ஓடும் தனியார் ரயிலில் அறிமுகமான ஒரு வாரத்திலேயே விதிகளை மீறி கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டு இருப்பது பயணிகளிடையே பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. 1989ம் ஆண்டு ரயில்வே சட்டப்படி பயணிகள் மற்றும் சரக்கு ரயில் கட்டணங்களை மத்திய அரசு மட்டுமே நிர்ணயிக்கமுடியும். ரயில்வேயின் ஒரு அங்கமான ஐஆர்சிடிசி- யால் கூட ரயில் கட்டணங்களை தன்னிச்சையாக தீர்மானிக்க முடியாது. இவ்வாறான கடுமையான சட்டங்கள் அமலில் உள்ள போதே டெல்லி - லக்னோ பெறும் ஆரவாரத்துடன் கடந்த 4ம் தேதி தொடங்கப்பட்ட தனியார் ரயிலில், அதே பாதையில் இயக்கப்படும் சதாப்தி  எக்ஸ்பிரஸை காட்டிலும் 3ல் ஒரு பங்கு அதிக கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.

அதாவது ஏசி எக்ஸ்கியூடிவ்  வகுப்புக்கு சதாப்தி ரயிலில் ரூ.1,855 வசூலிக்கப்படும் நிலையில், தனியார் ரயிலில் ரூ.2,450 ஆக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏ.சி. சாதாரண பெட்டியில் சதாப்தி ரயில் கட்டணம் ரூ.1,165. அதுவே தனியார் ரயிலில் ரூ.1, 565 ஆகும். அத்துடன் 5 வயதுக்குட்பட்டோருக்கு டிக்கெட் கிடையாது என்பன போன்ற ரயில்வே சலுகைகளிலும் தனியார் ரயிலில் புறக்கணிக்கப்பட்டு இருந்தன.அறிமுகமான ஒரு வாரத்திற்கு உள்ளாகவே தனியார் ரயிலில் சட்டத்திற்கு புறம்பாக கட்டணம் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டு இருப்பது தனியார் மையம் மீதான மக்களின் அச்சத்தை உறுதிப்படுத்தும் வகையில் இருக்கிறது. அதே நேரத்தில் மேலும் 150 ரயில்களையும் 50 ரயில் நிலையங்களையும் தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அரசு உயர்மட்டக்குழு அமைத்திருப்பது மக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.


Tags : launch ,Delhi ,Lucknow , Delhi, Lucknow, Private, Railway, Fare, High Level Committee, Central Government
× RELATED லக்னோ சவாலை சமாளிக்குமா டெல்லி