×

நவ.8ம் தேதி கர்தார்பூர் தடம் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

புதுடெல்லி: இந்தியா-பாகிஸ்தான் இடையிலான கர்தார்பூர் வழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 8ம் தேதி திறந்து வைக்கிறார்  பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக் குருத்வாராவையும், பாகிஸ்தானில் நரோவால் மாவட்டத்தில் ராவி நதிக்கரையில் அமைந்துள்ள தர்பார் சாகிப் குருத்வாராவையும் இணைப்பதற்கான கர்தார்பூர் வழித்தடத்தை அமைக்க, இந்தியா-பாகிஸ்தான் அரசுகள் கடந்தாண்டு நவம்பரில் ஒப்புக் கொண்டன. அதன்படி, இந்த வழித்தடம் அமைக்கப்பட்டு பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இந்நிலையில், மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் பாதல் நேற்று டிவிட்டர் பதிவில், குரு நானக்கின் ஆசிர்வாதத்தினால், சீக்கிய யாத்ரீகர்கள் நீண்ட நாட்களாக மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த கர்தார்பூர் சாகிப் தரிசன கனவு  நனவாக உள்ளது. பிரதமர் மோடி இந்தியாவில் உள்ள கர்தார்பூர் சோதனை சாவடியை வரும் நவம்பர் 8ம் தேதி திறந்து வைத்து வரலாற்று சாதனை படைக்க உள்ளார்’’ என்று கூறியுள்ளார்.
 

Tags : Gardarpur footprint, PM Modi
× RELATED பூஞ்ச் ​​பகுதியில் தீவிரவாத தாக்குதலில் 5 வீரர்கள் காயம்