×

தமிழகத்தின் விருந்தோம்பல் மிக சிறப்பு: சீன அதிபர் ஜின்பிங் புகழாரம்

சென்னை: சீன அதிபர் ஜின்பிங் பேசியதாவது: சென்னை வந்துள்ள எனக்கு நீங்கள் தந்துள்ள வரவேற்பு மகிழ்ச்சியளிக்கிறது. தமிழகத்தில் விருந்தோம்பல் சிறப்பாக இருக்கிறது. அதை கண்டு வியந்துவிட்டேன். பிரதமர் மோடி பேசும்போது, நாம் இருவரும் மனம்விட்டு நண்பர்களைப்போல் பேச வேண்டும் என்று கூறினார். பேச்சுவார்த்தை சிறப்பாக அமைந்தது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் நல்லுறவு நிலவுகிறது. இந்திய பிரதமர் சீனாவுக்கு விரைவில் வரவேண்டும் என்று அழைத்தேன். அழைப்பை பிரதமர் ஏற்றுக் கொண்டார். சீனாவின் 70வது சுதந்திர தின விழாவை இரு நாடுகளும் இணைந்து கொண்டாட முடிவு செய்துள்ளோம். சீனாவில் 35 நிகழ்ச்சிகளும், இந்தியாவில் 35 நிகழ்ச்சிகளும் ஒருங்கிணைந்து நடத்தப்படும்.

 சீன-இந்திய வெளிநாட்டு கொள்கை, வர்த்தக உறவு மேம்படுத்துதல், வர்த்தகத்தில் உள்ள ஏற்ற தாழ்வுகளை சீராக்குதல் குறித்து விவாதித்தோம். தொடர்ந்து அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தி, இருக்கும் குறைகளை நிவர்த்தி செய்வோம். இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தை சமீபத்தில் கொண்டாடியது வரலாற்று சிறப்பு மிக்கதாகும்.  இந்த பேச்சுவார்த்தை மிகப்பெரிய மாற்றத்திற்கான அடித்தளமாகியுள்ளது. இரு நாட்டு உறவுகள் மேலும் வலுவடைந்து வருகிறது. எனக்கும் என்னுடன் இங்கு வந்துள்ள அதிகாரிகளுக்கும் இது மறக்கமுடியாத ஒரு நிகழ்வாக உள்ளது.இவ்வாறு ஜின்பிங் பேசினார்.



Tags : Xinping Nadu ,Chinese ,Tamil Nadu ,President ,Xinping , Tamilnadu, Chinese President, Jinping
× RELATED அருணாச்சலப்பிரதேசத்தில் சீன எல்லையை...