×

வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தூர்வாரும் அகழி மண்ணை விவசாயத்திற்கு பயன்படுத்த இலவசமாக பெறலாம்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

வேலூர்: வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தூர்வாரும் கோட்டை அகழி மண்ணை விவசாயத்திற்கு பயன்படுத்த இலவசமாக பெறலாம் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ32 கோடி மதிப்பீட்டில் வேலூர் கோட்டையை அழகுபடுத்த முடிவு செய்யப்பட்டது. இதில் முதல்கட்டமாக கோட்டை அகழியை தூர்வாரும் பணிகள் கடந்த மாதம் தொடங்கியது. தூர்வாரும் பணிகளுக்காக 4 நவீன மிதவை இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன.

இந்த இயந்திரங்களைக்கொண்டு அகழியை தூர்வாரும் பணிகள் ெதாடங்கியது. கடந்த மாதம் 15ம் தேதி தூர்வாரும் பணிகள் தொடங்கியது. இதுவரையிலும் 20 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. வருகிற டிசம்பர் மாதத்துக்குள் தூர்வாரும் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அகழியில் இருந்து அள்ளப்படும் மண் லாரிகள் மூலம் வெளியேற்றப்படுகிறது. இந்த மண் ரசாயனங்கள் கலக்காத இயற்கை உரமாக உள்ளது. ஆனால் எந்த பயன்பாட்டுக்கும் கொண்டு செல்லப்படாமல் வெளியில் கொட்டப்படுகிறது. இந்நிலையில், இந்த மண்ணை விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களுக்கு பயன்படுத்த இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். தேவை உள்ள விவசாயிகள் மாநகராட்சியை தொடர்பு கொள்ளலாம் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Corporation officials ,Corporation , Vellore, Smart City Project, Municipal Authorities Information
× RELATED அனைத்து அரசு அலுவலர்களை ஒருங்கிணைத்து