×

கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பேற்பு

திருவனந்தபுரம்: கேரள உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக எஸ்.மணிகுமார் பொறுப்பேற்றார்.  கேரளா  உள்பட சில மாநிலங்களில் சமீபத்தில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர். கேரள உயர் நீதிமன்ற தலைமை  நீதிபதியாக சென்னை உயர்  நீதிமன்ற நீதிபதி எஸ்.மணிகுமார் நியமிக்கப்பட்டார். அவர் நேற்று  பதவியேற்றார். திருவனந்தபுரம் கவர்னர் மாளிகையில் நேற்று காலை நடந்த பதவியேற்பு விழாவில் கேரள கவர்னர் ஆரிப்முகம்மதுகான்   அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் கேரள முதல்வர்  பினராய் விஜயன், முன்னாள் கேரள கவர்னரும், முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை  நீதிபதியுமான சதாசிவம், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன்,   சுந்தரேஷ், சுரேஷ்குமார்,  சுப்பிரமணியம் பிரசாத் உள்பட நீதிபதிகள்,  கேரள அமைச்சர்கள் , தமிழ்நாடு அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண், கூடுதல்  அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன், தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர்   பி.எஸ்.அமல்ராஜ், துணை தலைவர் கார்த்திகேயன், உறுப்பினர் மோகனகிருஷ்ணன்  உள்பட பலர் கலந்துகொண்டனர்.Tags : Chief Justice ,Kerala High Court , Chief Justice of Kerala, High Courtt
× RELATED ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி கொரோனாவால் உயிரிழப்பு