×

பெங்களூருவில் 2-வது நாளாக ஐ.டி. ரெய்டு; காங்கிரஸ் மூத்த தலைவர் மருத்துவ கல்லூரியில் ரூ.4.5 கோடி பறிமுதல்

பெங்களூரு: பெங்களூரு, தும்கூரு, கோலார் தங்கவயல் உள்ளிட்ட 30 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில் காங்கிரஸ் மூத்த தலைவர் பரமேஸ்வராவுக்கு சொந்தமான மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியில் ரூ.4.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மத்தியில் பாஜ தலைமையில் 2வது  முறையாக ஆட்சி அமைந்த பின் கர்நாடகாவில் உள்ள மூத்த காங்கிரஸ் தலைவர்கள்  வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

முன்னாள்  அமைச்சர்கள் டி.கே.சிவகுமார், பரமேஸ்வர் நாயக், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் லட்சுமி ஹெப்பாள்கர், ராஜண்ணா ஆகியோர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை  நடத்தினர். இதில் கிடைத்த ஆவணங்களை ஆதாரமாக வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள்  சோதனை நடத்தி வழக்கு தொடர்ந்தனர். தற்போது,  டி.கே.சிவகுமார் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான ஆர்.எல்.ஜாலப்பாவை தலைவராக கொண்டு இயங்கிவரும் தேவராஜ் அரஸ் மருத்துவ கல்லூரி, ஆர்.எல். ஜாலப்பா மருத்துவமனை, ஆர்.எல்.ஜாலப்பா நர்சிங் கல்லூரி  ஆகியவற்றில் நேற்று அதிகாலை 10க்கும்  மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

அதேபோல், முன்னாள்  துணை முதல்வர் பரமேஸ்வருக்கு சொந்தமான சித்தார்த்தா கல்வி குழுமத்துக்கு துமகூரு மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி, பொறியியல் கல்லூரி, முதல்நிலை கல்லூரி, டிகிரி கல்லூரி உள்பட 20க்கும் மேற்பட்ட  கல்வி  நிறுவனங்கள் உள்ளன.

நேற்று அதிகாலை 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஒரே நேரத்தில் இவற்றில் சோதனை நடத்தினர். மேலும், பெங்களூரு  சதாசிவ நகரில் உள்ள பரமேஸ்வர் வீடு, அலுவலகம், அவரது சகோதரருக்கு சொந்தமான  வீடு, அலுவலகங்களிலும் சோதனை  நடத்தப்பட்டது. இதில், பல முக்கிய ஆவணங்கள் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த சோதனை பெங்களூரு, தும்கூரு, கோலார் தங்கவயல் உள்ளிட்ட 30 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

Tags : Congress ,Income Tax Department ,Karnataka ,Parameswara ,Bengaluru , Bengaluru, Income Tax Department, Congress, Karnataka, Parameswara
× RELATED சென்னையில் வருமான வரித்துறை சோதனை:...