×

சீன அதிபருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கத்தில் வந்ததாக 5 பேர் கைது: கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை

சென்னை: பிரதமர் மோடி, சீன அதிபர்  ஜி ஜின்பிங் ஆகியோர் இன்று மாமல்லபுரத்தில் சந்தித்து பல்வேறு ஒப்பந்தங்களை குறித்து பேச உள்ள நிலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதனிடையே நேற்று இரவு கிழக்கு கடற்கரை சாலையில் தாஜ் ஓட்டல் அமைந்துள்ள குன்றுக்காடு பகுதியில் நடைபெற்ற வாகன சோதனையில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியை சேர்ந்த 4 பேர் பிடிபட்டனர். இவர்கள் பெங்களூர் யுனிவர்சிட்டியில் பிஏ இரண்டாம் ஆண்டு பொலிடிகல் சயின்ஸ் படிக்கும்  20 வயதுடைய கர்மா  ட்டெ.சரிங் ராம்ஜியால் , சலாம் ராவ் சோர், டென்ஜின் செராப் , அரியானா மாநிலத்தை சேர்ந்த பங்கஜ் யாதவ் (பிரீலன்சர்) ஆகிய 4 பேர்  மற்றும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த  கார் ஓட்டுநர் 29 வயதுடைய ஜம்புலிங்கம் ஆகிய 5 பேர்களையும் பிடித்து விசாரித்ததில் சீன அதிபருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கத்தில் வந்ததாக கூறப்படுகிறது. இவர்களை நிலமோசடி பிரிவு கண்காணிப்பாளர் கண்ணம்மா தலைமையில் கைது செய்து கேளம்பாக்கம்  காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Chancellor ,Chinese , Chinese Chancellor, 5 protesters arrested
× RELATED 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில்...