×

தானே ரயில் நிலையத்தில் 1 ரூபாய் மருத்துவமனையில் இளம்பெண்ணுக்கு பிரசவம்

தானே: தானே ரயில் நிலையத்தில் உள்ள ஒரு ரூபாய் மருத்துவமனையில் இளம்பெண்ணுக்கு சுகப் பிரசவம் நிகழ்ந்துள்ளது.  மத்திய ரயில்வே தனது புதிய முயற்சியாக, முக்கிய ரயில் நிலையங்களில் ஒரு ரூபாய் மருத்துவமனையை   அறிமுகம் செய்தது. இந்த மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு கட்டணமாக ஒரு ரூபாய் மட்டுமே பெறப்படும். தானே ரயில் நிலையத்தில் உள்ள இதுபோன்ற மருத்துவமனையில் நேற்று இளம்பெண்ணுக்கு சுகப்பிரசவம்  நிகழ்ந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், ராய்காட்டில் உள்ள கர்ஜாத்தில் இருந்து நிறைமாத கர்ப்பிணியான சுபாந்தி பத்ரா, ரயிலில் பயணம் செய்தார். அவர், மும்பை அருகே உள்ள பரேல் பகுதிக்கு செல்ல இருந்தார்.

கர்ஜாத்தில் இருந்து இந்த இடம், 35 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. ரயிலில் பயணம் செய்தபோது சுபாந்திக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனே, ரயில்வே அதிகாரிகளுக்கு பயணிகள் தகவல் தெரிவித்தனர். தானேவை ரயில் அடைந்ததும்,  அங்குள்ள ஒரு ரூபாய் மருத்துவமனையில் சுபாந்தி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சுகப்பிரசவம் நடந்தது. தாயும், சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர், அவர்கள் தனியார் மருத்துவமனைக்கு  மாற்றப்பட்டனர். இது, இந்த ஒரு ரூபாய் மருத்துவமனையில் நடந்த 10 பிரசவமாகும்.

Tags : birth ,railway station ,Thane ,Thane Railway Station , Thane Railway Station, Hospital, Adolescent, Childbirth
× RELATED சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளி மாநில பெண் மர்ம மரணம்..!!