×

கேளம்பாக்கம் அருகே 2 திபெத் மாணவர்களை பிடித்து விசாரணை

சென்னை: சீன நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் மக்கள் தங்களை தனி நாடாக அறிவிக்க கோரி பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சீன அதிபர் செல்லும் இடங்களில் அவர்கள் திரண்டு நின்று அவ்வப்போது கோஷங்களை  எழுப்பி கவனத்தை கவர்வது வழக்கம். தமிழகத்திற்கு வரும் சீன அதிபருக்கு இதுபோன்று நடந்து விடக்கூடாது என்பதற்காக திபெத் மாணவர்கள், பேராசிரியர்கள், மாணவர் சங்க தலைவர், போராட்டக்குழு செயலாளர் உள்ளிட்டோரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து  வருகின்றனர். புதுச்சேரி அருகே கோட்டக்குப்பத்தில் ஒரு போராட்டக்காரரை கைது செய்த போலீசார் சென்னை சேலையூர் அருகில் 8 மாணவர்களையும் கைது செய்தனர். இந்நிலையில் சீன அதிபர் பயணம் செய்யும் கிழக்கு கடற்கரை சாலையில்  பாலவாக்கத்தில் தங்கியிருந்த திபெத் பேராசிரியர் ஒருவரையும் நீலாங்கரை போலீசார் கைது செய்தனர். அவர் படூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார்.

இந்நிலையில் அதே பல்கலைக் கழகத்தில் தங்கி படித்து வந்த  இரண்டு திபெத் மாணவர்கள் கேளம்பாக்கம் போலீசாரால் நேற்று கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்கள் இருவரையும் கேளம்பாக்கம் போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்த போலீசார் சீன அதிபர் வந்து செல்லும் வரை போராட்டங்களில் ஈடுபடக்  கூடாது என்று எழுதி வாங்கிக் கொண்டு அதுவரை போலீஸ் கண்காணிப்பில் இருக்க அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். மேலும் அந்த இரண்டு மாணவர்களின் பெயர் மற்றும் விவரங்களை போலீசார் வெளியிட மறுத்து விட்டனர். சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்திய பிரதமர் மோடியை சந்திக்கும் கோவளம் ஐந்து நட்சத்திர ஓட்டலில் இருந்து இந்த கல்லூரி 3 கி.மீ.  தூரமே உள்ளது. இதனால், வேறு திபெத் மாணவர்கள் தங்கி உள்ளனரா என்று போலீசார் நேற்று பல தனியார் கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் சல்லடை போட்டுத் தேடினர்.

Tags : Tibetan ,Kelambakkam Near Kalambakkam , Kalambakkam, 2 Tibetan ,students ,arrested
× RELATED பல்வேறு துறைகளில் பணிபுரிய 138 பேருக்கு பணி நியமன ஆணை