×

மேகதாதுவில் அணைகட்ட அனுமதிக்கக்கூடாது மத்திய அமைச்சர்களுக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்

சென்னை: கர்நாடகா அரசு மேகதாதுவில் அணைகட்ட அனுமதிக்கக்கூடாது என்று முதல்வர் பழனிச்சாமி, மத்திய அமைச்சர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் சேஷாவத் மற்றும் சுற்றுச்சூழல், வனம் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:கடந்த ஜூன் மாதம் நான் எழுதிய கடிதத்தில் கர்நாடக அரசு மேகதாதுவில் அணைகட்டுவது தொடர்பான திட்ட அறிக்கையை நிராகரிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். காவிரி பிரச்னை தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது  என்றும் கருத்து தெரிவித்திருந்தேன். காவிரி ஒழுங்காற்று வாரியம், உச்சநீதிமன்றம் காவிரி ஆற்றுப்படுகையில் நீரை தேக்கி வைப்பதற்கான போதிய வசதிகள் இருப்பதாக தெரிவித்துள்ளது.

எனவே, மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக அரசின் கோரிக்கையை நிராகரிக்கவேண்டும். உச்சநீதிமன்றத்தில் இந்த திட்டத்திற்கு எதிராக தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அது நிலுவையில் இருக்கும்போது கர்நாடக  அரசு அணைக்கட்டும் முயற்சியை எடுப்பது நீதிமன்ற அவமதிப்பாகும். இந்த திட்டம் தொடர்பான உயர்மட்ட அதிகாரிகள் குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. அதில், இந்த திட்டத்திற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், இரு மாநிலங்களுக்கு இடையில் ஓடும் நதியில் ஒரு மாநிலத்தின் அனுமதி இல்லாமல் அணை கட்ட எந்த உரிமையும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.எனவே, கர்நாடக அரசு மேகதாதுவில் அணைக்கட்டும் நடவடிக்கைக்கு எந்தவித அனுமதியும் அளிக்கக்கூடாது. அவர்களின் விரிவான திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலைத்துறை  அமைச்சகத்திற்கு உரிய அறிவுரை வழங்க வேண்டும். இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்.


Tags : Chief Minister ,ministers ,Megadadu , allow, dams , Chief Minister's, letter, central ministers
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...